Andrea Jeremiah
கொரோனா குறித்து நடிகை ஆண்ட்ரியா உருக்கமாக கூறியதாவது: ஒரு நாள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலம் குறித்து நமது பேரக் குழந்தைகளிடம் சொல்லுவோம். நமது வேலைகள், வழக்கமான காலை நடைப்பயிற்சி, நீண்ட தூரப் பயணம், பிடித்த உணவகங்களில் உணவு, திருமணங்கள், பிறந்தநாள் விழாக்கள், வீட்டுக் கொண்டாட்டங்கள், சுற்றுலா மற்றும் நமது உயிர்கள் என அனைத்துக்கும் அச்சுறுத்தல் இருந்த காலம்.
இந்த பித்துப் பிடிக்கும் சூழலை நாம் எப்படிக் கையாண்டோம் என்பதே அவர்கள் கேட்க விரும்பும் கதையாக இருக்கும். இவ்வளவு குழப்பத்துக்கு நடுவில் தனிமையில், ஒற்றுமையாக நாம் நல்லறிவைத் தேர்ந்தெடுத்தோமா, பொறாமையை விடுத்து பச்சாதாபத்தைத் தேர்ந்தெடுத்தோமா, பேராசையை விடுத்து பெருந்தன்மையைத் தேர்ந்தெடுத்தோமா? இப்போது நாம் இரண்டு விஷயங்கள் செய்யலாம்.
ஒன்று கற்பனையாக அதைச் சொல்லலாம் அல்லது வாழ்ந்து காட்டலாம்.வீட்டிலிருந்தோம், சமூக ஊடகங்களால் சோர்வுற்றோம், சலித்துப் போய் படைப்பாற்றலோடு இருந்தோம், பால்கனிகளில் நின்று, வெளியே சேவை செய்து கொண்டிருப்பவர்களுக்காகப் பாடல் பாடினோம், கை தட்டினோம் என்று நாம் அவர்களுக்குச் சொல்லலாம். ஒரு புதிய நாளைப் பார்க்க நாம் உயிர் பிழைத்தோம் என்ற இந்தக் கதையைக் கெடுக்காதீர்கள்… இப்படிக்கு க்ளைமாக்ஸ் இவ்வாறு அவர் கூறினார்.
திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில்…
ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இசையமைப்பாளர் நடிகர் என…
விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்…
இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா வித்யாவிடம்…