பியர் கிரில்ஸ் நிகழ்ச்சியில் ரஜினிகாந்தின் சர்ச்சை கருத்து, ரசிகர்கள் உச்சக்கட்ட கோபம்

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர். இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த படம் தயாராகி வருகின்றது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சமீபத்தில் டிஸ்கவரி சேனலுக்காக பியர் கிரில்ஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சி நேற்று மாலை ஒளிப்பரப்பாகியது, இந்த நிகழ்ச்சி, கண்டிப்பாக ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

அதோடும் பெரும் சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ளது, ஆம், ரஜினிகாந்த் இந்தியா ஹிந்துக்கள் அதிகம் இருக்கும் நாடு.

இஸ்லாம், கிறிஸ்துவர்களுக்கு என்று நாடு உள்ளது, ஆனால், இந்தியா இந்துக்களுக்கான நாடாக பார்க்கப்பட்டது, ஆனாலும் நாங்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பது போல் கூறியிருந்தார்.

இது ரசிகர்களிடம் கடும் சர்ச்சையை எழுப்பியுள்ளது, அதோடு டுவிட்டரில் இது பெரிய வாக்கு வாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் இந்தியாவை ஹிந்து மதத்துடன் குறிப்பிட்டு சொன்னது கோபப்படுத்தியுள்ளது சிலருக்கு.

மேலும், ரஜினிகாந்த் இந்தியாவில் வறுமைகள் ஒழிய வேண்டும், எல்லோருக்கும் தண்ணீர் கிடைக்க வேண்டும்.

ஏனெனில் இந்தியாவின் தண்ணீர் பிரச்சனை தான் பெரிதாக பார்க்கப்படுகின்றது என பேசினார்.

அது மட்டுமின்றி 70 வயதில் எப்படி இவ்வளவு இளமையாக உள்ளார் என பியர் கிரில்ஸ் ஆச்சரியமாக கேட்டார்.

மேலும், ரஜினிகாந்த் ஷு நாட்-ஐ பியர் கிரில்ஸ் போட்டு விட்டது தான் ஹைலேட்.

இது மட்டுமின்றி நான் நடிக்கும் போது தான் ரஜினிகாந்த், மற்ற நேரத்தில் சிவாஜி ராவ் என்ற சாமனிய மனிதன் தான் என்றும் பேசினார்.

பியர் கிரில்ஸ் ஒரு ஆச்சரியத்துடனே ரஜினியிடம் அனைத்து தகவலையும் கேட்டு வந்தது பார்ப்பவர்களுக்கு செம்ம விருந்து தான்.

இதில் செம்ம கலாட்டா என்னவென்றால், பியர் இங்கு முதலைகள் இருக்கும் என சொல்ல, ரஜினி உடனே, தன் ஸ்டைலில் ‘அட வாய்யா போகலாம்’ என சொல்ல செம்ம ஜாகியாகவும் இருந்தார்.

Suresh

Recent Posts

ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த அதிரடிப் படத்தில் யார் ஹீரோ?

பாலிவுட்டில் சல்மான் கான் நடித்த ‘சிக்கந்தர்’ மற்றும் தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மதராசி’ உள்ளிட்ட பெரிய படங்களைத் தொடர்ந்து, இயக்குநர்…

1 day ago

திருமண நாளை கொண்டாடிய நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி!

தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திர தம்பதிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களது 4-வது திருமண நாளை குடும்பத்துடன் சிறப்பாக…

1 day ago

மணிகண்டன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘மக்கள் காவலன்’ என தலைப்பு அறிவிப்பு!

‘குட் நைட்’, ‘லவ்வர்’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் மணிகண்டன், தனது அடுத்த…

1 day ago

ஹபீபி- திரை விமர்சனம்

தமிழ் முஸ்லிம் சமூக மக்களின் வாழ்க்கை முறை, குடும்ப உறவுகள், காதல் மற்றும் சமூக கட்டுப்பாடுகளை மையமாக வைத்து உருவாகியுள்ள…

2 days ago

ஆட்டி – திரை விமர்சனம்

மர்மம், குற்ற விசாரணை, பெண்களுக்கு எதிரான அநீதிகள் மற்றும் பழிவாங்கும் கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆட்டி’. மலைப்பகுதியை…

2 days ago

Oh Sukumari Teaser

Oh Sukumari Teaser (Tamil) | Thiruveer | Aishwarya Rajesh | Bharath Dharshan | Bharath Manchiraju

2 days ago