படங்களை நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய விஜய் எதிர்ப்பு?

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தை ஏப்ரல் 9-ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தை 5 மொழிகளில் வெளியிட உள்ளனர். இதனிடையே மாஸ்டர் படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக செய்திகள் பரவின. இதனை படக்குழு திட்டவட்டமாக மறுத்தது.

இந்நிலையில், படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடுவதற்கு நடிகர் விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாஸ்டர் படத்தை ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய பிரபல நிறுவனம் அணுகிய போது, ரசிகர்கள் தியேட்டரில் வந்து கொண்டாடுவதற்காக தான் படத்தை எடுத்துள்ளோம், ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய அல்ல என விஜய் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், திரிஷாவின் பரமபதம் விளையாட்டு, சித்தார்த்தின் டக்கர், சந்தானத்தின் சர்வர் சுந்தரம் ஆகிய படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Suresh

Recent Posts

‘சிஸ்டம்’ படத்தில் அபார நடிப்பு: ஐகானிக் கோல்ட் ஸ்ட்ரீமிங் விருதை வென்ற ஜோதிகா!

அமேசான் ஒரிஜினல் திரைப்படமான ‘System’ படத்தில், சரிதா என்ற கதாபாத்திரத்தில் ஆழமான உணர்வுகளுடன் கூடிய மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக,…

17 hours ago

டேட்டிங் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கும் ரம்யா கிருஷ்ணன்!

தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சி வரலாற்றில் புதிய முயற்சியாக, ஜியோஹாட்ஸ்டார் தனது புதிய டேட்டிங் ஷோவான ‘Second Love’-ஐ அறிவித்துள்ளது. காதலுக்கு…

17 hours ago

61 வயதில் மூன்றாவது திருமணத்தை உறுதி செய்த அமீர் கான்!

பாலிவுட் முன்னணி நடிகர் அமீர் கான், தனது நீண்டகால லிவ்-இன் பார்ட்னர் கௌரி ஸ்ப்ராட்டை வரும் ஜூலை 5ஆம் தேதி…

18 hours ago

இசையுலகில் ஆதிக்கம் செலுத்தும் அனிருத்… அடுத்தடுத்து காத்திருக்கும் பிரம்மாண்ட படங்கள்!

இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் அனிருத் ரவிச்சந்தர், 2012-ஆம் ஆண்டு வெளியான '3' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக…

18 hours ago

மாஸ் இயக்குநர்களுடன் கைகோர்க்கும் அதர்வா

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் அதர்வா, தற்போது முன்னணி இயக்குநர்களின் படங்களில் அடுத்தடுத்து…

18 hours ago

கட்டா குஸ்தி 2 – திரை விமர்சனம்

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளியாகியுள்ள 'கட்டா குஸ்தி 2', குடும்ப உறவுகள், பெண்களின் கனவு, பெற்றோரின் பொறுப்பு ஆகியவற்றை…

18 hours ago