நான் விலக மாட்டேன் – பிரசன்னா அதிரடி

அனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து, தயாரித்த படம் ‘வரனே அவஷ்யமுண்டு’. இந்தப் படத்தில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டி இருந்தார்கள். இந்த காட்சிக்கு தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

துல்கர் சல்மான் இதற்கு மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து துல்கர் சல்மான் தனது ட்விட்டர் பதிவில் ஒரு கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில் தனது தரப்பு நியாயத்தை விளக்கி, அதற்கு மன்னிப்பும் கோரியிருந்தார்.

துல்கர் சல்மான் இந்தக் கடிதத்தை வெளியிட்டு, இதற்காக தனது குடும்பத்தினரையும் யாரும் இந்த அளவுக்குத் திட்டியிருக்க வேண்டாம் என்ற வருத்தத்தையும் பதிவு செய்தார். இதற்கு பிரசன்னா துல்கருக்கு ஆறுதல் தெரிவித்து, மேலும் மன்னிப்பு கோரியிருந்தார்.

பிரசன்னாவின் இந்தக் கருத்தை வைத்து பலரும் அவரையும் திட்டத் தொடங்கினார்கள். ஆனால், பிரசன்னா இதற்குப் பதிலடி கொடுக்காமல் அமைதியாகவே இருந்தார். இதை வைத்துப் பலரும் பிரசன்னா ட்விட்டர் தளத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளார் எனக் கூறினர்.

இது தொடர்பாக பிரசன்னா கூறும் போது, “யாரோ ஒரு சிலர் நடந்துகொள்ளும் விஷயத்துக்காக நான் ட்விட்டரிலிருந்து விலகமாட்டேன். பலமுறை எனக்கு எவ்வளவோ அன்பும், ஆதரவும் ட்விட்டரில் கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.

Suresh

Recent Posts

கிஸ் : 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

கவின் நடிப்பில் வெளியான கிஸ் படத்தின் நான்கு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக…

43 minutes ago

சூர்யா நடிக்கும் கருப்பு படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.!

சூர்யா நடிக்கும் கருப்பு படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.இவரது…

1 hour ago

ஜனநாயகன் : ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்து வெளியான தகவல்.!!

ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…

2 hours ago

மீனாவுக்கு வந்த ஐடியா, அண்ணாமலை சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…

4 hours ago

சுந்தரவல்லி கேட்ட கேள்வி கண் முழித்து கலங்கிய நந்தினி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

4 hours ago

தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும்…

21 hours ago