vadivelu
நகைச்சுவை நடிகர் வடிவேலு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததற்காக புதிய படங்களுக்கு அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது.
கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் அவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனாலும் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் வடிவேலுவை வைத்து எலி படத்தை தயாரித்த சதீஷ்குமார் தனக்கு அந்த படம் மூலம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். இதுகுறித்து அவர் கூறும்போது, “வடிவேலுவை வைத்து படம் எடுப்பதற்காகவே நான் பட நிறுவனம் தொடங்கினேன். அவர் நடித்த எலி படத்தினால் எனக்கு ரூ.14 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது. அதற்கு ஈடாக 2 படங்களில் நடித்து தருவதாக உறுதி அளித்தார். ஆனால் சொன்னபடி செய்யவில்லை. என்னையும் எனது குடும்பத்தினரையும் மிரட்டுகிறார். வடிவேலுக்கு சம்பள பாக்கி இருப்பதாக அவரது உறவினர் பணம் கேட்டு மிரட்டுகிறார்” என்றார்.
இதுகுறித்து போலீசிலும் புகார் அளித்தார். வடிவேலுவை போலீஸ் தேடுவதாகவும் அவர் தலைமறைவாகி விட்டார் என்றும் தகவல் பரவின. இதனை வடிவேலு மறுத்துள்ளார். என்னை களங்கப்படுத்தவும், எதிர்காலத்தை வீணாக்கவும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. நான் தலைமறைவாகவில்லை. கோவிலுக்கு சென்று இருந்தேன்” என்று கூறியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பூஜா ஹெக்டே, பாலிவுட் நடிகர் ரோஹன் மெஹ்ரா உடன் டேட்டிங் செய்து வருவதாக…
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர்-நடிகர் மிஷ்கின் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு ‘சத்தியவான் சாவித்திரி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் அட்லீ, தற்போது அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகும் ‘ராக்கா’ படத்தை இயக்கி வருகிறார். இதில்…
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் 2 படத்தை முடித்த கையுடன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குநர் சிபி…
‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில், மலையாள இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள Toxic: A Fairy Tale…
எம்.எல்.ஏ வீட்டில் கொள்ளை அடிக்க முயலும் இளைஞராக தனுஷ் நடித்திருக்கும் இந்த படம், ஒரு கிராமத்து ஹீஸ்ட் திரில்லராக தொடங்குகிறது.…