netrikann nayanthara
‘அவள்’ படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் அடுத்ததாக நயன்தாராவை வைத்து ’நெற்றிக்கண்’ என்கிற திரில்லர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். அவர் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்க உள்ளார்.
இப்படத்தில் நயன்தாரா கண் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார். மேலும் இப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ’பிளைண்டு’ என்ற கொரியன் படத்தின் ரீமேக்காகும். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் நடிகர் அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அஞ்சாதே, கோ, இரவுக்கு ஆயிரம் கண்கள் ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இவருக்கு, இப்படத்தின் கதாபாத்திரமும் பேசப்படும் என்கின்றனர் படக்குழுவினர். 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
Polladha Aasaigal Lyric Video | 29 | Sean Roldan | Vidhu, Preethi Asrani | Rathna…
பாலிவுட் நடிகர் Aamir Khan தனது மகன் Junaid Khan மற்றும் Sai Pallavi நடித்துள்ள ‘ஏக் தின்’ (Ek…
நடிகர் Dhanush நடித்துள்ள ‘கர’ திரைப்படம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. ‘போர் தொழில்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர்…
இயக்குநர் Chetan DK இயக்கத்தில், Kajal Aggarwal மற்றும் Shreyas Talpade முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’…
சென்னையில் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற்ற Tamil Film Producers Council பொதுக்குழு கூட்டத்தில், சிறிய முதலீட்டு திரைப்படங்களுக்கு கடந்த…
மூத்த நடிகர் Bharat Kapoor, மாரடைப்பு காரணமாக தனது 80வது வயதில் காலமானார். மும்பையில் உள்ள சியோன் மருத்துவமனையில் பிற்பகல்…