தளபதி 65 இயக்கப்போவது நானில்லை – இளம் இயக்குனர் அறிவிப்பு

விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள இப்படத்தில் விஜய் சேதுபது வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மாஸ்டர் படம் அடுத்த மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. முருகதாஸ், சுதா கொங்காரா, லோகேஷ் கனகராஜ், மகிழ் திருமேனி, ஷங்கர், அஜய் ஞானமுத்து ஆகியோரது பெயர்கள் அடிபட்டது.

இந்நிலையில், விஜய்யின் 65-வது படத்தை கோப்ரா பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்க உள்ளதாகவும், இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் விக்கிபீடியாவில் குறிப்பிடப்பட்டுள்ளது தொடர்பான புகைப்படத்தை பதிவிட்டு, ரசிகர் ஒருவர், இது உண்மையா? என கேட்டிருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த அஜய் ஞானமுத்து, “இது யார் பாத்த வேலைனு தெரியலையே” என கமெண்ட் அடித்திருந்தார். இதன்மூலம் அவர் விஜய்யின் 65-வது படத்தை இயக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

Suresh

Recent Posts

‘அரசன்’ முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு

கலைப்புலி V Creations எஸ். தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படம்…

13 hours ago

தமிழ் சினிமாவில் 50 வருட அனுபவம் கொண்டவர் பாக்யராஜ்

பிரபல இயக்குநரும், நடிகரும், திரைத்துறையின் பல்துறை கலைஞருமான கே. பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சென்னை கிரீம்ஸ்…

13 hours ago

திரைப்பட இயக்குநர் கே. பாக்யராஜ்- வாழ்க்கை வரலாறு சிறப்பு தொகுப்பு

தமிழ் சினிமாவின் “திரைக்கதையின் மன்னன்” என போற்றப்படும் இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் கே. பாக்யராஜ் (கிருஷ்ணசாமி பாக்யராஜ்) 1953…

13 hours ago

பாரதிராஜா மறைந்து 17 நாட்களில் காலமான பாக்யராஜ்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான கே. பாக்யராஜ் (73) இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். உடல்நலக்குறைவு…

13 hours ago

நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமானார்

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக விளங்கிய கே. பாக்யராஜ் இன்று காலமானார்.…

15 hours ago

Nightu Nila Lyric Video

Nightu Nila Lyric Video | Vekkai | G.V. Prakash Kumar | Shivani | Akiran Moses

1 day ago