Dhruv Vikram
விக்ரமின் மகன் துருவ் ஆதித்ய வர்மா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்காக வெளியான இப்படத்தில் துருவ் விக்ரமின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. தற்போது அடுத்த படத்துக்கு தயாராகி வரும் துருவ் விக்ரம், பல்வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், துருவ் விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் இயக்கிய பரியேறும் பெருமாள் படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, தற்போது தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை மாரி செல்வராஜ் இயக்குவார் என கூறப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…
தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…
ஜனநாயகன் படம் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான காரணத்தை இரு தரப்பினரும் கூறவில்லை என்று பேசியுள்ளார் இயக்குனர் அமீர். தமிழ் சினிமாவில் முன்னணி…