RK Selvamani
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “மத்திய-மாநில அரசுகள் ஊரடங்கு அறிவிப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பே தமிழ் திரைப்படத்துறையின் அனைத்து வேலைகளையும் நிறுத்தி ஏறக்குறைய 50 நாட்களை கடக்க இருக்கிறோம்.
இனியும் வேலை முடக்கம் நீடிக்கப்பட்டால் கொரொனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பித்த தொழிலாளர்கள் பசிப்பிணியில் பட்டினி சாவுகளை எதிர்நோக்க வேண்டிய அபாயகரமான சூழ்நிலையில் உள்ளார்கள். தற்போது 17 தொழில்துறைக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கி இருப்பதை போல் திரைப்பட துறைக்கும் தொலைக்காட்சிகளுக்கும் நிபந்தனையோடு அனுமதி வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
குறைந்த பட்சம் திரைப்படங்களுக்கு படப்பிடிப்பு அல்லாத பணிகளான ரெக்கார்டிங், ரீ ரெக்கார்டிங், டப்பிங், போன்ற போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கும் தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கும் அனுமதி வழங்கினால் சம்மேளனத்தின் 40, 50 சதவீத தொழிலாளர்கள் வேலை செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்பதையும் அவர்கள் பட்டினி சாவிலிருந்து தப்பிக்க முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த பணிகளை சமூக இடைவெளியுடன் செய்ய வைக்க முடியும் என்பதையும் தெரிவித்து இதற்கான அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மத்திய மாநில அரசுகளின் கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் ஏற்று இந்த பணிகளை சமூக இடைவெளியுடன் மருத்துவ பாதுகாப்புடன் சுகாதாரமான முறையில் செய்வோம் என்றும் உறுதி அளிக்கின்றோம்”. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…
'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…
செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…
தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…