manju warrier
கொரோனாவால் இந்திய திரையுலகம் முடங்கி உள்ளது. வேலை இழந்த திரைப்பட தொழிலாளர்களுக்கும் துணை நடிகர்-நடிகைகளுக்கும் உதவ, தமிழ் நடிகர்கள் பெப்சி அமைப்புக்கும், நடிகர் சங்கத்துக்கும் நிதி வழங்கி வருகிறார்கள். தெலுங்கு நடிகர்கள், முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு பல கோடிகளை வழங்கி உள்ளனர்.
தனுஷ் ஜோடியாக ‘அசுரன்’ படம் மூலம், தமிழ் பட உலக்குக்கு அறிமுகமான பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர், ஏற்கனவே மலையாள சினிமா தொழிலாளர்களுக்கு உதவ ரூ.5 லட்சம் வழங்கி இருந்தார். தற்போது கேரளாவில் ஊரடங்கால் கஷ்டப்படும் திருநங்கைகளுக்கு வீட்டுக்கு தேவையான அரிசி, மளிகை பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார்.
இதனை கொச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் திருநங்கைகளுக்கான திவ்யா என்ற அமைப்பின் தலைவரும், மேக்கப் கலைஞருமான ரெஞ்சு ரெஞ்சிமர் தெரிவித்துள்ளார்.
மஞ்சு வாரியருக்கு போனில் திருநங்கைகள் கஷ்டப்படுவது பற்றி சொன்னதும் உடனடியாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்தார் என்று முகநூலில் அவர் கூறியுள்ளார்.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…