yogi babu and tamanna
‘கோல மாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவை, யோகி பாபு ஒரு தலையாக காதலிப்பது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்தக் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது.
இதையே யோகி பாபு கதாநாயகனாக நடித்து வரும் ‘பேய் மாமா’ படத்தில், டைரக்டர் சக்தி சிதம்பரம் காட்சிப்படுத்தி இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
“யோகி பாபு பிரபல கதாநாயகிகளை காதலிப்பது போல், ‘பேய் மாமா’ படத்தில் நகைச்சுவை காட்சிகள் வைக்கப்பட்டு இருக்கிறது. அவர் நயன்தாரா, சமந்தா ஆகிய இருவரையும் ஒரு தலையாக காதலித்து தோல்வி அடைவது போலவும், அதனால் அவருடைய காதல் தமன்னா பக்கம் திரும்புவது போலவும் நகைச்சுவையாக காட்சிப்படுத்தி உள்ளோம்.
திருட்டையே தொழிலாக கொண்ட அவர், அதன் மூலம் ரூ.100 கோடி சம்பாதிக்க திட்டமிடுகிறார். தமன்னாவை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், “ஓம் தமன்னாய நமஹ” என்று ஆயிரம் முறை மந்திரங்களை ஓதுவது போலவும், தன் படுக்கை அறை முழுவதும் தமன்னாவின் படங்களை ஒட்டி வைத்திருப்பது போலவும் காட்சிகள் இடம்பெறுகின்றன” என்றார்.
Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…
'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…
செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…
தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…