Categories: Spiritual

சொந்த வீடு வாடகை வீடு என எதில் வசிப்பவராக இருந்தாலும் இனி வாஸ்து தோஷம் குறித்த எந்த அச்சமும் இல்லாமல் நிம்மதியாக வாழ, இந்த ஒரு எலுமிச்சை பழம் உங்கள் கைகளில் இருந்தால் மட்டும் போதும்!!!

நாம் வீட்டை கட்டும் போது வாஸ்து பார்த்து முறைப்படி கட்டினாலும் கூட சில சமயங்களில் இது போன்ற பிரச்சினைகள் வரும். வாஸ்து என்பது வஸ்து என்ற பொருளை குறிக்கும். அதாவது வீட்டில் உள்ள பொருட்களிலும் கூட வாஸ்து உள்ளது. வீடு கட்டும் போது சரியாக கட்டிய பிறகு, சில பொருட்களை வைக்க கூடாத இடத்தில் மாற்றி வைக்கும் போதும் இது போன்ற பிரச்சனைகள் வரக் கூடும். ஆனால் நாம் ஒவ்வொன்றையும் இப்படியே பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. எனவே இந்த ஒரு எளிய பரிகார முறையை செய்து கொண்டால் வாஸ்து குறித்து எந்த ஒரு கவலையும் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் வாஸ்து பிரச்சனைகளுக்கு ஒரு எளிய பரிகார முறையை பற்றி தான் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

வாஸ்து தோஷம் நீங்க:
பொதுவாக ஒரு வீட்டில் வடகிழக்கு மூலையில் பசுமையான நிறத்தில் உள்ள படங்களோ அல்லது ஒரு சிறிய தொட்டியில் செடி போன்றவை வைத்தாலே வாஸ்து பிரச்சனைகள் சரியாகி விடும் என்பது ஐதீகம். அது மட்டுமின்றி தேவகனி என்று சொல்லப்படும் எலுமிச்சை மரத்தை வீட்டில் நட்டு வளர்க்கும் போது எந்தவிதமான வாஸ்து பிரச்சனைகளும் வராமல் தடுக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

இப்போதும் இந்த வாஸ்துவுக்கு நாம் பரிகாரம் செய்ய தேவையான பொருள் எலுமிச்சை பழம் தான். ஏழு எலுமிச்சை பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டின் நான்கு மூலையிலும் ஏழு எலுமிச்சை பழத்தையும் ஒவ்வொன்றாக சுற்ற வேண்டும். அப்படி பார்க்கும் போது ஒவ்வொரு மூலையிலும் நாம் ஏழு முறை எலுமிச்சை பழத்தை வைத்து சுற்றுவோம். அதன் பிறகு இந்த எலுமிச்சை பழங்கள் அனைத்தையும் வீட்டிற்கு வெளியில் கொண்டு வந்து அதை இரண்டு பாதியாக நறுக்க வேண்டும்.

இப்படி நறுக்கிய இந்த எலுமிச்சை பழ துண்டுகளை வீட்டிற்கு வெளியே சென்று சமமாக பிரித்து நான்கு மூலையிலும் தூக்கி எறிந்து விடுங்கள். அதன் பிறகு உங்கள் கை கால்களை சுத்தம் செய்து கொண்டு வீட்டிற்குள் வந்து விடுங்கள். இந்த பரிகாரத்தை ஒரு முறை செய்தாலே போதும்.

இதே போல் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் ஒரே ஒரு எலுமிச்சை பழத்தை மட்டும் எடுத்து பாதியாக அரிந்து அதன் சாறை மட்டும் நான்கு மூலைகளில் லேசாக பிழிந்து விட்டு, அந்த எலுமிச்சை பழத்தை வெளியில் தூக்கி போட்டு விடுங்கள். இதை வாரம் வாரம் சனிக்கிழமை செய்து வரலாம். இப்படி செய்யும் பொழுது வீட்டில் வாஸ்து சம்பந்தமான எந்த குறைபாடும் வரவே வராது. அது மட்டும் இன்றி வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் கூட இதன் மூலம் சரியாகி விடும் என்றும் சொல்லப்படுகிறது.

பொதுவாகவே எலுமிச்சை பழத்துக்கு தீயவை எடுத்துக் கொண்டு நல்லவற்றை நமக்கு கொடுக்கக்கூடிய ஆற்றல் உண்டு. அதனால் தான் அது கனிகளிலேயே மிகவும் அற்புதமான பலனை பெற்று இருக்கிறது. முன் காலங்களில் எல்லாம் பெரும்பாலும் அனைவர் வீட்டிலிம் இந்த எலுமிச்சை மரம் நட்டு வைத்திருந்தார்கள் அவர்கள் இந்த வாஸ்து குறித்து வைத்திருந்தார்களா என்று தெரியாது ஆனால் அந்த பிரச்சனைகள் அவர்களுக்கு வராமல் இருக்க இவையெல்லாம் ஒரு காரணம் என்று சொல்லலாம்.

உங்கள் வீட்டிலும் இட வசதி இருந்து வைக்க முடிந்தால் ஒரு எலுமிச்சை கன்றை நட்டு வைத்து விடுங்கள். செடி வைத்து வளர்க்க முடியாதவர்கள் இந்த எளிய பரிகாரத்தின் மூலம் வாஸ்து பிரச்சனையை சரி செய்து கொள்ளலாம்.

 

admin

Recent Posts

பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

1 day ago

முத்துவை மன்னிப்பு கேட்க சொன்ன சீதா, பதிலடி கொடுத்த மீனா, வெளியான சிறகடிக்க ஆசை ப்ரோமோ.!!

அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…

1 day ago

வாட்டர் மெலன் ஸ்டார் குறித்து பேசிய வினோத்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

1 day ago

டியூட் படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…

1 day ago

பைசன் : 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…

1 day ago

எலிமினேஷன் கார்டுடன் வந்த விஜய் சேதுபதி.. வெளியேறப் போவது யார்? வெளியான முதல் ப்ரோமோ.!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

1 day ago