Suriya
நடிகர் சூர்யா தனது 2 டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பாக தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார். தற்போது ஜோதிகா நடிப்பில் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
கடந்த ஒருமாதத்திற்கும் மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாக முடியாத நிலையுள்ளது. இந்நிலையில் ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் நேரடியாக டிஜிட்டல் பிளாட்ஃபார்மான அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது.
இதனையடுத்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள வீடியோவில், ”இந்த முடிவை நாங்கள் எதிர்கிறோம். ‘பொன்மகள் வந்தாள்’ டிஜிட்டல் ஃபிளாட்பார்மில் வெளியானால், 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்படாது. திரைப்படங்கள் முதலில் திரையரங்குகளில் தான் வெளியாக வேண்டும். பின்னர் தான் டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் வெளியாக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களை தொடர்ந்து சாய் பல்லவி, தற்போது இந்தியிலும்…
"சினிமாவில் இருக்கும் சிலர் தடை போடுகின்றனர்" - நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது என்ன? சினிமாவில் முன்னேற்றத்திற்கு தடைகளாக இருப்பவர்கள் யார்…
விரைவில் விஷால், சாய் தன்ஷிகா திருமணம் எப்போது தெரியுமா? நடிகர் சங்க கட்டிட வேலை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.…
இஸ்லாமிய வாழ்வியலைப் பேசும் ‘ஹபீபி’ 'ஹபீபி' என்ற படத்தின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களை…