சூர்யாவின் அறிக்கை சிறப்பு – விஜய் சேதுபதி டுவிட்

சென்னையில் நடந்த விருது விழாவில் நடிகை ஜோதிகா பேசும்போது தஞ்சை பெரிய கோவில் குறித்து சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தாலும், தொடர்ந்து ஆதரவும் பெருகி வருகிறது. இதனிடையே ஜோதிகாவின் கருத்தில் உறுதியாக இருப்பதாக கூறி அறிக்கை வெளியிட்டார் சூர்யா.

அந்த அறிக்கையில், ‘மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை’ என்கிற கருத்து சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும். ஒரு விருது வழங்கும் விழாவில் எப்போதோ ஜோதிகா அவர்கள் பேசியது, இப்போது ஊடகங்களில் செய்தியாகவும், சமூக ஊடகங்களில் விவாதமாகவும் மாறி இருக்கிறது, ‘கோவில்களைப் போலவே பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை, சிலர் குற்றமாக பார்க்கிறார்கள்.

இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மீகப் பெரியவர்களே சொல்லியிருக்கிறார்கள். ‘மக்களுக்கு உதவினால், அது கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்து சிந்தனை. நல்லோர் சிந்தனைகளைப் படிக்காத, காதுகொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை. பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்கிற கருத்தை, எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் வரவேற்கவே செய்கின்றனர்.

கொரோனா தொற்று காரணமாக இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும், எங்களுக்கு கிடைத்த பேராதரவு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளித்தது, அறிஞர்கள், ஆன்மீகப் பெரியவர்களின் எண்ணங்களைப் பின்பற்றி வெளிப்படுத்திய அந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம். மதங்களைக் கடந்து மனிதமே முக்கியம் என்பதையே எங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லித்தர விரும்புகிறோம்.

தவறான நோக்கத்தோடு, தரக்குறைவாக சிலர் அவதூறு பரப்பும் போதெல்லாம், நல்லோர்கள், நண்பர்கள், ரசிகர்கள் எங்களுக்கு துணை நிற்கிறார்கள். முகமறியாத எத்தனையோ பேர் எங்கள் சார்பாக பதில் அளிக்கிறார்கள். ஊடகங்கள் சரியான விதத்தில் இச்சர்ச்சையைக் கையாண்டன. நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்கச் செய்கிறார்கள். எங்களுக்கு உறுதுணையாக நிற்கும் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், சூர்யாவின் இந்த அறிக்கைக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், நடிகர் விஜய் சேதுபதி இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். சூர்யாவின் அறிக்கையை குறிப்பிட்டு ‘சிறப்பு’ என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் அவர் சூர்யாவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

Suresh

Recent Posts

பாக்ஸ் ஆபீஸ் வேட்டையில் மெகா கூட்டணி: வசூலை வாரிக்குவித்த தந்தை-மகன்!

இந்திய திரையுலகில் பல நட்சத்திரக் குடும்பங்கள் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளன. ஒரே குடும்பத்தில் இருந்து பல தலைமுறைகள்…

10 hours ago

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியான மற்றும் பல்துறை திறமையான நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் Vijay Sethupathi. கதாநாயகன், வில்லன், சிறப்புத்…

10 hours ago

கோலிவுட்டில் புதிய வாரிசின் வருகை? தனுஷ் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் யாத்ரா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநரான Dhanush-ன் மூத்த மகன் Yathra, விரைவில் கதாநாயகனாக வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளதாக…

10 hours ago

மக்களை ஏளனமா நினைக்கல… மன்னிப்பு கேட்ட நடிகர் மகேந்திரன்

சமீபத்தில் நடிகர் மகேந்திரன் அளித்த பேட்டியில் இடம்பெற்ற சில கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் விவாதங்களை ஏற்படுத்தின. குறிப்பாக,…

10 hours ago

டபுள் ஆக்குபன்ஸி திரைப்பட விமர்சனம்

பல ஆண்டுகள் குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் போஸ் வெங்கட் – வினோதினி தம்பதிக்கு இறுதியாக குழந்தை பிறக்கிறது. ஆனால் பிறந்த…

10 hours ago

சாருகேசி திரைப்பட விமர்சனம்

புகழ்பெற்ற கர்நாடக சங்கீதக் கலைஞராக வாழும் சாருகேசி (ஒய்.ஜி. மகேந்திரா), இசையையும் தனது மனைவி பத்மா (சுஹாசினி)வையும் தனது வாழ்க்கையின்…

10 hours ago