samantha
சமந்தா நடித்துள்ள ஜானு தெலுங்கு படம் வசூலை குவிக்கவில்லை என்றாலும் பாராட்டை பெற்று கொடுத்துள்ளது. அடுத்து அவர் தமிழ், தெலுங்கில் தயாராகும் புதிய படத்தில் நடிக்கிறார். அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ’நான் நடிகையாகாமல் இருந்திருந்தால் கண்ணாடி அணிந்து கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டு இருப்பேன்.
கண்டிப்பாக பணம் சம்பாதிக்கும் முயற்சியில்தான் இருப்பேன். ஏனென்றால் சிறுவயதில் இருந்தே சுயமாக சம்பாதிக்க வேண்டும் என்பது எனது கனவு. வைர நகைகள் மிகவும் பிடிக்கும். அதை அணியும்போது அழகாக இருக்கிறேன் என்று பாராட்டுகிறார்கள்.
எனக்கு பிடித்த சுற்றுலா தளம் புளோரிடாவில் இருக்கும் மியாமி. அமெரிக்க வெப் தொடர்கள் அதிகம் பார்ப்பேன். நகைச்சுவை உணர்வு உள்ள ஆண்களை பிடிக்கும். நகைச்சுவை இருந்தால்தான் சிரித்து சந்தோஷமாக இருக்க முடியும்’. இவ்வாறு அவர் கூறினார்.
அஜித் 64 படம் குறித்து வதந்தி பரவ ட்விட்டர் பிரபலமான ரமேஷ் பாலா விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி…
மணிரத்னம் மற்றும் ஏ.ஆர் ரகுமான் கூட்டணி இணைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக ஜொலித்து வருபவர் மணிரத்தினம். முன்னணி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…