seenu ramasamy
கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் தியேட்டர்களும் மூடப்பட்டதால் சினிமா துறை கடும் இழப்பை சந்தித்துள்ளது. ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும், திரையரங்குகள் திறக்க ஓரிரு மாதங்கள் ஆகும் என்றே சொல்லப்படுகிறது. இதனால் சிறு பட்ஜெட் படங்களை ஓடிடி தளங்களில் நேரடியாக ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். அந்தவகையில் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஆதரவு குரல்களும் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், இதுகுறித்து இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “OTT, இது விஞ்ஞான மாற்றம், இதை இப்போது விரைவுபடுத்தியிருக்கிறது கரோனா. சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு லாபம், நிறைய புதிய கலைஞர்கள், புதிய கதைகள் எனச் சினிமாவின் தரமும் உயரும், தியேட்டர் கிடைக்காமல் அவதிப்பட்டோரின் படங்களை உலகம் பார்க்கப் போகிறது என நினைக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
ரவி மற்றும் ஸ்ருதிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் குறிப்பாக…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…