anushka shetty
சீனாவில் உருவான கொரோனா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் உலக நாடுகளை பயமுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த கொடிய வைரஸ் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. வைரஸ் பாதிப்பில் இருந்து மீள்வதற்காக மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், நடிகை அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரோனா குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: வாழ்க்கையில் நாம் கற்றுக்கொண்டதை எல்லாம் மறந்து, முற்றிலும் புதிதாக கற்றுக்கொண்டிருக்கிறோம். நாம் இதுவரை செய்ய முடியாது என்று நினைத்ததை எல்லாம் இப்பொழுது செய்துகொண்டிருக்கிறோம். நம்மால் முடிந்ததை இப்பொழுது செய்ய முடியாத நிலை.
நாம் காலத்தால் பிரிந்திருந்தாலும், புவியியல் ரீதியான தடையால் நாம் ஒன்றாக நிற்கிறோம். நமது பாதுகாப்புக்காக பணிபுரியும் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது. இந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டு வரும்போது எல்லோருக்கும் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. சின்னதோ, பெரியதோ அந்த கதாபாத்திரத்தை மனிதனாக மனிதத்துடன் செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…
‘டிராகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை கயாடு லோகர். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து 60-க்கும்…
Kadalaadum Seemayile Video Song | Enna Vilai | Karunaas |Nimisha | Sam CS | Sajeev…