darbar movie stills
ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் நேற்று வெளியானது. தமிழகத்தில் சிறப்பு காட்சியைக் காண தியேட்டர்களில் அதிகாலையிலேயே ரசிகர்கள் குவிந்தனர். பல தியேட்டர்களில் காலை 5 மணிக்கே ‘தர்பார்’ திரையிடப்பட்டன. ‘தர்பார்’ படத்தை இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியிட தடைகோரி தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தது.
இதையடுத்து ‘தர்பார்’ படத்தை 1,370 இணையதளங்களில் வெளியிட கோர்ட்டு தடைவிதித்து உத்தரவிட்டது. இதையும் மீறி ‘தர்பார்’ திரைக்கு வந்த சில மணி நேரத்திலேயே முழு படமும் இணையதளங்களில் வெளியானது. அதனை பதிவிறக்கம் செய்து பலரும் பார்த்தனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
சமீபகாலமாகவே புதிய படங்கள் அனைத்தும் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாகி தயாரிப்பாளர்களுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதனை தடுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. தியேட்டர்களில் கேமரா கொண்டு செல்ல தடை விதித்தது. திரையரங்குகளில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டன. ஆனாலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
[Best_Wordpress_Gallery id="1035" gal_title="Bhagavan Movie Stills"]
[Best_Wordpress_Gallery id="1034" gal_title="Breakfast Movie Audio Launch"]
[Best_Wordpress_Gallery id="1033" gal_title="Light Weight Baby Title Launch"]
[Best_Wordpress_Gallery id="1032" gal_title="LIK Thanks Giving Meet"]
தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பால் கவனம் பெற்ற நடிகை Riythvika, தனது திருமணம் குறித்து ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்த…
இலங்கையைச் சேர்ந்தும் தமிழர் பண்பாட்டு வேர்களை தன்னகத்தே கொண்டும் உலக இசை ரசிகர்களை கவர்ந்த குரலாக திகழ்கிறார் Dhee. தனித்துவமான…