Categories: Movie Reviews

ஆக்‌ஷன் திரை விமர்சனம்

நடிப்பு : விஷால், தமன்னா, ஐஸ்வர்ய லட்சுமி, அகன்ஷா பூரி மற்றும் பலர்

தயாரிப்பு : டிரைடன்ட் ஆர்ட்ஸ்

இயக்கம் : சுந்தர். சி

இசை : ஹிப்ஹாப் தமிழா

மக்கள் தொடர்பு : ஜான்சன்

வெளியான தேதி : 15 நவம்பர் 2019

ரேட்டிங் : 2.5/5

எத்தனை நாள்தான் நானும் மசாலா படமாக எடுப்பது என்று சுந்தர் சி. சற்று வித்தியாசமான முயற்சியில் இறங்கிய படம்தான் ஆக்ஷன்.

இயக்குனர் சுந்தர்.சி படம் என்றாலே நகைச்சுவைப் திரைப்படமாக தான் இருக்கும். படத்தில் இருக்கும் நாயகனிலிருந்து ஒரு நிமிடக் கதாபாத்திரம் வரை ஏதாவது பேசிக் கொண்டே இருப்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் மொத்தமாக பத்து பக்கங்களுக்கு வசனம் மட்டுமே எழுதி இருப்பார்கள் என நினைக்கிறேன்

இந்தியாவில் பல நாச வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் தீவிரவாதிகள, கும்பல் பாகிஸ்தான் அரசு மற்றும் அரசு அதிகாரிகள் உதவியுடன் பாகிஸ்தானில் தங்கியிருக்கிறான். அங்குள்ள அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவி அவனை கதாநாயகன் விஷால் எப்படி இந்தியாவுக்குக் கொண்டு வருகிறார் என்பது தான் கதைக்களம்

ஆக்ஷ்ன் என படத்தின் பெயரை வைத்து விட்டதாலோ என்னவோ தெரியவில்லை படம் முழுவதும் ஆக்ஷன் காட்சிகளாகவே நிறைந்திருக்கிறது. கதாநாயகன் விஷால் ஒன்று ஓடுகிறார்கள் இல்லை துரத்துகிறார்கள் அதுவும் இல்லை என்றால் சண்டை போடுகிறார்கள்.

2 மணி நேரம் 38 நிமிடங்கள் ஓடும படத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக வெறும் ஆக்ஷன் மட்டும் தான் இருக்கிறது. மீதி 38 நிமிடத்தில் 3 பாடல்களுக்காக ஒரு 15 நிமிடத்தை கழித்துவிட்டால், மீதி 23 நிமிடத்தில் தான் படத்தின் வசனக் காட்சிகள் இருக்கின்றன.

நமது நாட்டின் பெரிய தலைவரின் குண்டு வெடிப்புக் கொலை, தன் அண்ணன் தற்கொலை, தன் காதலி மர்ம மரணம், என ஒரே நாளில் நடக்கும் இறப்புகளுக்குக் காரணமாக பின்னணியில் இருக்கும் பாகிஸ்தான் தீவிரவாதத் தலைவனை, கர்னல் ஆன விஷால் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் திரைப்படத்தின் மீதிகதை.

துருக்கி, லண்டன் கரிபீயன் தீவு, பாகிஸ்தான் என சில பல நாடுகளில் படத்தைப் பறந்து பறந்து படமாக்கி இருக்கிறார். இயக்குனர் சுந்தர் சி

வெளிநாட்டில் படமாக்கப்பட்ட அந்தக் காட்சிகளில் கதாநாயகன் விஷால் ஓடுகிறார், அவர் பின்னால் கதாநாயகி தமன்னா ஓடுகிறார். அவர்களை போலீஸ் துரத்துகிறது, ராணுவம் துரத்துகிறது, இன்னும் யார் யாரோ துரத்துகிறார்கள். யார் கையிலும் சிக்காமல், எந்த சிசிடிவி பார்வையிலும் சிக்காமல் தப்பித்துக் கொண்டே வருகிறார்கள்.

அதிக கட்டுப்பாட்டுடன் இருக்கும் இஸ்தான்புல் வங்கிக்குள் நுழைந்து சர்வசாதாரணமாக சர்வர் ரூமுக்குள் நுழைந்து அங்கிருக்கும் தகவல்களைத் திருடி, 4000 கோடி பணத்தை நாசூக்காக (?) டிரான்ஸ்பர் செய்து என அங்கு நம்ப முடியாத காட்சி ஒன்று. அதன் பின் பாகிஸ்தானில் மறைந்திருக்கும் முக்கியத் தீவிரவாதத் தலைவன் கபீர் துகான் சிங்கை, அலேக்காகத் தூக்கி வருகிறார்கள்.

இப்படி எத்தனை எத்தனையோ நம்பமுடியாத காட்சிகளை நீங்கள் பார்த்தாலும் அதில் எந்த கேள்வியையும் கேட்க முடியாது. சமயத்தில் தெலுங்குப் படத்தைப் பார்க்கிறோமோ என்றெல்லாம் கூட தோன்றுகிறது.

தெலுங்குப் படத்தில் நடிக்கும் நடிகர் பாலகிருஷ்ணாவை
பின்னுக்குத் தள்ளியா ஆக்ஷ்ன் படத்தின் மூலமாக பாலகிருஷ்ணாவை வென்று விட்டார் கதாநாயகன் விஷால்.

இருந்தாலும் படத்திற்கு ஆக்ஷன் இயக்குனர்களாகப் பணிபுரிந்த அன்பறிவ் இரட்டையர்களைப் பாராட்டியே ஆக வேண்டும்.
இருவருக்கும் ஒரு பெரிய சல்யூட் அவர்களின் வேகத்திற்கு இணையாக ஒளிப்பதிவாளர் டுட்லி கேமிராவைத் தூக்கிக் கொண்டு எப்படித்தான் ஓடினாரோ பாவம். இந்த இருவர் இல்லை என்றால் இந்த ஆக்ஷன் படமில்லை.
அதனால்தான் படத்தில் நடித்திருப்பவர்களைப் பற்றிச் சொல்வதற்கு முன்னால் இவர்களைப் பற்றிச் சொல்கிறோம்.

ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாய் கர்னல் என்று சொன்னால் நம்பும்படியான தோற்றத்தில் கதாநாயகன் விஷால். மிலிட்டரியில் இருந்தால் கூட நம் ஹீரோக்கள் தலைமுடியை வெட்ட மாட்டார்கள்.

ஆனால், இந்தப் படத்தில் கதாநாயகன் விஷால் அதை பக்காவாக செய்திருக்கிறார். ஹேர்ஸ்டைலில் அவர் செலுத்திய கவனத்தை படம் முழுவதும் ஆக்ஷனிலும் செய்திருக்கிறார்.

கரணம் தப்பினால் மரணம் என்று பல காட்சிகள் படத்தில் உள்ளன. டூப் போடாமலேயே நடித்திருக்கிறார் என்கிறார்கள். கிரீன் மேட் காட்சிகள் இருந்தால் கூட அவற்றில் நடிக்க ஒரு தைரியம் வேண்டும்.

அதை அசால்ட்டாக செய்திருக்கிறார். காதலிக்கும் போது கொஞ்சம் காதல், காதலி இறந்ததும் கொஞ்சம் சோகம், கோபம் அத்துடன் அவருடைய நடிப்பு முடிந்துவிட்டது, மீதமெல்லாம் ஆக்ஷன், ஆக்ஷன் ஒன்லி தான். இப்படி ஒரு ஹீரோ இல்லை என்றால் இந்தப் படத்தை இயக்குனர் சுந்தர் .சியால் எடுத்திருக்கக் கூட முடியாது.

கதாநாயகன் விஷாலின் காதலியாக ஐஸ்வர்ய லட்சுமி. லேசாகக் கொஞ்சி, லேசாகச் சிரித்து, அழகாகப் பார்த்து என நாம் அவரை ரசிப்பதற்குள் அநியாயமாய் கொன்றுவிடுகிறார்கள். கொஞ்சம் சதை போட்ட சாய் பல்லவி போல இருக்கிறார்.

கதாநாயகன் விஷாலுடன் மிலிட்டரியில் அதிகாரியாக இருக்கும் கதாநாயகி தமன்னா. பாகுபலி படத்தைப் பார்த்து அவரை ஆக்ஷன் கதாநாயகியாக இந்தப் படத்திலும் கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார் இயக்குனர். சுந்தர் சி அந்த நம்பிக்கையை கதாநாயகி தமன்னா வீணாக்கவில்லை. இறங்கி நடித்திருக்கிறார்,

கதாநாயகன் விஷால் அண்ணனாக ராம்கி, அண்ணியாக சாயா சிங், அப்பாவாக பழ கருப்பையா ஒரு சில காட்சிகளில் வந்து போகிறார்கள். படத்தின் வில்லனாக கபீர் துகான் சிங். பாகிஸ்தானில் ஒரு பிரம்மாண்ட வீட்டுக்குள் இருந்து கொண்டு, நான் யார் தெரியுமா, நான் யார் தெரியுமா என்று மிலிட்டரி அதிகாரியை மிரட்டுவதுடன் அவரது வில்லத்தனம் முடிவுக்கு வருகிறது. நகைச்சுவை என்ற பெயரில் ஷாரா கொஞ்சம் மொக்கை போடுகிறார். இன்டர்நேஷனல் கில்லராக அகன்ஷா பூரி. அற்புதமாக கிளாமர் காட்டிவிட்டு, அநியாயமாக கொலையும் செய்கிறார். லண்டனில் ஒரு காட்சியில் ஹேக்கராக வந்து கதாநாயகன் விஷாலுக்கு உதவி செய்துவிட்டு அப்படியே காணாமல் போய்விடுகிறார் யோகிபாபு.

படத்திற்கு இசை ஹிப்ஹாப் தமிழா. சண்டை போட்டு இந்தப் படத்தை வாங்கியதாக சுந்தர் .சி சொன்னார். அதற்காகவாவது கொஞ்சம் உழைத்திருக்கலாம்.

கதாநாயகன் விஷால், கதாநாயகி தமன்னா, திரைப்படத்தில் வரும் சில போலீஸ் அதிகாரிகள் கம்ப்யூட்டர் இஞ்சினியரிங்கும் முடித்திருப்பார்கள் போலிருக்கிறது.

கீ போர்டில் இரண்டு தட்டு தட்டி பயங்கரமாக ஹேக் செய்கிறார்கள். எந்த நாட்டுக்குப் போனாலும் எதையும் செய்து முடிக்கிறார்கள். இப்படி நான்கு பேர் இருந்தால் இந்த இந்தியாவில் எந்த தீவிரவாதிகிட்டயிருந்தும் காப்பாற்றிவிடலாம்.

இந்தியாவில் மிகப் பெரிய தொழில் அதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி என சில கோடீஸ்வரர்கள் பல வங்கிகளை ஏமாற்றி பல்லாயிரம் கோடிகள் மோசடி செய்து நாட்டை விட்டு ஓடியது, தமிழ் சினிமாவில் விஜயகாந்த் காலத்திற்குப் பிறகும் அழிக்க முடியாத பாகிஸ்தான் தீவிரவாதம், உள்கட்சி மற்றும் உள்குத்து அரசியல் ஆகியவற்றை வைத்து ஒரு கதை செய்து அதை ஆக்ஷன் முலாம் பூசி ரசிகர்களைக் கவர முயற்சித்திருக்கிறார்கள்.

ஆக்ஷன் – நோ நோ லாஜிக், ஒன்லி மேஜிக் ஆக்ஷ்ன்

admin

Recent Posts

இளநீர் பாயாசம் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

இளநீர் பாயாசம் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

7 hours ago

அஜித் 64 படத்திற்கு சம்பளத்தை உயர்த்திய அஜித்..!

சம்பளத்தை அஜித் உயர்த்தியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட்…

9 hours ago

குஷி படத்தை தொடர்ந்து ரீ ரிலீஸ் செய்யப்போகும் விஜயின் ஹிட் திரைப்படம்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி…

9 hours ago

ஜனநாயகன் படம் எப்படி இருக்கும்..H.வினோத் கொடுத்த தரமான தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை…

13 hours ago

வருத்தப்பட்ட கிரிஷ் பாட்டி, ரோகினி சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடு க்ரிஷ் பாட்டி…

16 hours ago

சூர்யாவை பார்த்த சுந்தரவல்லி, வலியில் துடிக்கும் நந்தினி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

16 hours ago