Thala Ajith
அஜித்குமாரின் வீரம், வேதாளம் ஆகிய 2 படங்களும் இந்தியில் ரீமேக் ஆகிறது. வீரம் படம் 2014-ம் ஆண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது. ஜோடியாக தமன்னா நடித்து இருந்தார். சிவா இயக்கினார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. வசூல் சாதனையும் நிகழ்த்தியது.
இதையடுத்து வீரம் படத்தை தெலுங்கில் கட்டமராயுடு என்ற பெயரில் எடுத்தனர். அஜித்குமார் வேடத்தில் பவன் கல்யாண் நடித்தார். தற்போது இந்தியிலும் வீரம் படம் ‘பச்சன் பாண்டே’ என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. இதில் அஜித்குமார் வேடத்தில் அக்ஷய்குமார் நடித்து வருகிறார். சமீபத்தில் படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட்டனர்.
அடுத்து வேதாளம் படமும் இந்திக்கு போகிறது. வேதாளம் 2015-ல் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. அஜித்குமாருடன் சுருதிஹாசன், லட்சுமி மேனன், கபீர் சிங், சூரி, தம்பி ராமையா ஆகியோர் நடித்து இருந்தனர். இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் அஜித்குமார் கதாபாத்திரத்தில் ஜான் ஆபிரகாம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுருதிஹாசன், லட்சுமி மேனன் கதாபாத்திரங்களில் நடிக்க நடிகைகள் தேர்வு நடக்கிறது. ரோஹித் தவான் இயக்குகிறார். இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. இந்திக்கு ஏற்றவாறு திரைக்கதையில் லேசான மாற்றங்கள் செய்து வருகிறார்கள்.
11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…
Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில்,…
பிரம்மாண்டம். பரபரப்பு. மரண மாஸ்… நீங்கள் இன்னும் இதற்கு தயாராகவில்லை. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான துரந்தர் பழிவாங்கல்…
Mayilaa Official Teaser ,Women’s Day ,Semmalar Annam , Pa.Ranjith ,Newton Cinema https://youtu.be/lsqelNqSRo8?si=hAZYO0iw4-KOpsYq
Kolaiseval - Official Trailer , Kalaiyarasan , Deepa Balu ,R.P.Bala ,VR.Thudhivaanan , P.G.Muthiah https://youtu.be/b1NRY5BjFAo?si=2ChjfaU-bAN1cbI8
Maragatha Malai - Trailer , Santhosh Prathap, Deepshika ,L.V. Muthuganesh , Lathha https://youtu.be/aHLDNdNqHLc