ajith in valimai
தமிழ் திரையுலகில் தனது கடின உழைப்பினால், விட முயற்சினால் தனக்கென்று தனி இடத்தை ரசிகர்கள் மத்தியில் சம்பாதித்துள்ளார் தல அஜித்.
இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வரும் படம் வலிமை. இப்படத்தில் அஜித் ஒரு காவல் துறை அதிகாரியாக நடித்து வருகிறார்.
இப்படத்தின் முதலாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள பிரபல ரமோ ஜீ ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. இதனையடுத்து இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.
இதில் அஜித் அவர்களுக்கு விபத்து நடந்து காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வந்திருந்தன. இதனை குறித்து பல பிரபலங்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வந்தார்கள்.
இந்நிலையில் தற்போது மாஸ்டர் படத்தில் விஜய் அவர்களுடன் இணைந்து நடித்து வரும் நடிகர் சாந்தனு தனது டுவிட்டர் பக்கத்தில் “தல அஜித் அவர்கள் மிக விரைவாக மீண்டு வர வேண்டும். இவர் மட்டும் தான் ஸ்டண்ட் காட்சிகளில் மிகவும் ரிஸ்க்கான முயற்சிகளை செய்கிறார், நடிகர்களிலேயே டூப் எதுவும் பயன்படுத்தாத நடிகர்” என்றும் பதிவிட்டுள்ளார்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…