தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் முக்கியமான ஒன்று ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் சீரியல்களின் ரேட்டிங் நிலவரங்களை பார்க் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வாரத்திற்கான ரேட்டிங் நிலவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி ஜீ தமிழில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 5 சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
1. கார்த்திகை தீபம் :
ஆனந்திற்கு ஆபத்து அதற்காக அவரது மனைவி பரிகாரம் செய்ய வேண்டும் என்று ரியாவை சிக்க வைத்து கோவிலில் பரிகாரம் செய்ய தீபாவின் அதிரடி பிளான் போன்ற காட்சிகளுடன் ஒளிபரப்பாகிய கார்த்திகை தீபம் சீரியல் 4.66 என்ற ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.
2. அண்ணா :
ஸ்கூல் நிகழ்ச்சியின் ஷண்முகம் தலைமை தாங்க சௌந்தரபாண்டி அதுக்கு போட்டியாக கபடி போட்டி நடத்த ஷண்முகம் கலந்து கொள்ள இருந்த நிலையில் அண்ணனுக்காக வீரா பங்கேற்று வெற்றியை சூடிய கதையாக ஒளிபரப்பாகிய அண்ணா சீரியல் 4.04 என்ற ரேட்டிங்குடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
3. சந்தியா ராகம் :
மாயாவை மீண்டும் வெளிநாட்டுக்கு அனுப்ப ஷாரு செய்த சதி, மாயாவின் காதலை அறிந்த சீனு என எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிய சந்தியா ராகம் சீரியல் 3.97 என்ற ரேட்டிங்குடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
4. நினைத்தேன் வந்தாய் :
சுடரை கடத்தி வேலு கல்யாணம் செய்ய போக எழில் அதை கடைசி நொடியில் தடுத்து அஞ்சலிக்காக அவளை வீட்டிற்கு அழைத்து சென்ற கதையாக ஒளிபரப்பாகிய நினைத்தேன் வந்தாய் சீரியல் 3.33 ரேட்டிங் புள்ளிகளுடன் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.
5. நினைத்தாலே இனிக்கும் :
ஷில்பாவின் ஆவியை கிணற்றுள் அடைக்க நடக்கும் பூஜை, சித்தார்த் மாலையை கழட்டுவது போன்ற கதைக்களத்துடன் ஒளிபரப்பாகிய நினைத்தாலே இனிக்கும் சீரியல் 3.13 என்ற ரேடிங்குடன் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…
வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…
இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…
நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…