இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா நேற்று அதிகாலை 3 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். 12-ம் வகுப்பு படித்து வந்த மீரா கடந்த ஒரு வருடமாக மன அழுத்தத்திற்காக சிகிச்சை எடுத்து வந்ததாகவும், மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துக் கொண்டதாகவும் தகவல் வெளியானது. இவரது உடல் இன்று கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “விஜய் ஆண்டனியின் இழப்பை நினைத்து வருந்துகிறேன். ஒரு தந்தையாக, விஜய் ஆண்டனி இப்போது என்ன வேதனையை அனுபவித்திருப்பார் என்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. இந்த தாங்க முடியாத இழப்பை தாங்கும் சக்தியை அந்த குடும்பத்திற்கு எல்லாம் வல்ல இறைவன் வழங்க பிரார்த்திக்கிறேன்.
நம் அன்றாட வாழ்க்கையிலும், நம் குடும்பம் மற்றும் நட்பு வட்டாரங்களிலும் நம்மைச் சுற்றியுள்ள பலர் அமைதியாக பல்வேறு மன மற்றும் உணர்ச்சி வேதனைகளை அனுபவிக்கிறார்கள். வாழ்க்கை ஒருவரை நம்பிக்கையற்ற பாதையில் தள்ளலாம் அந்த இருள் சூழ்ந்த தருணத்தில், அவர்கள் அன்பு, நம்பிக்கை மற்றும் அழகான எதிர்காலத்திற்குத் தகுதியானவர்கள் என்பதை மறந்துவிடுவார்கள்.
வலிமை மற்றும் தைரியத்திற்கு சான்றாக இருக்கும் இந்த சவாலான காலங்களில் உதவியை நாடுமாறு மக்களை குறிப்பாக இளைய தலைமுறையினரை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரண்டையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…
என் உயிர் ரசிகர்களே, என் அன்பு நண்பர்களே எனது பேரன்புகொண்ட பொதுமக்களே வணக்கம், இன்று நான் நடிகனாக திரையுலகில் பயணித்து…
நடிகர் முரளியின் மகனான அதர்வா பானா காத்தாடி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து சண்டிவீரன், பரதேசி,…
தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதனைத்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்கூல் மேனேஜர்…