yaanai movie team in zee tamil special show
சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணி முதல் 9.30 மணி வரை ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி கோலிவுட் மேன்சன். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் வெள்ளித்திரையை சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்று வருகின்றனர்.
கடந்த வாரம் வீட்ல விஷேசம் படக்குழுவினர் பங்கேற்ற நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இந்த வாரம் இயக்குனர் ஹரி, அருண் விஜய், பிரியா பவானி ஷங்கர், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் என யானை படக்குழுவினர் பங்கேற்க உள்ளனர். வரும் ஜூலை 1-ம் தேதி இந்த யானை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதால் படக்குழுவினர் படத்தை பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிகழ்ச்சி குறித்த முதல் ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
ஆர் ஜே விஜய் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் நாஞ்சில் விஜயன் லேடி கெட்டப்பில் வந்து ஜிவி பிரகாஷிடம் பில்லா நயன்தாரா மாதிரி உங்க பெயரை என் பின்னாடி பச்சை குத்தி இருக்கேன் என சொல்ல பிரியா பவானி ஷங்கர் உட்பட பலரும் கலகலவென சிரித்துள்ளனர்.
அதன் பின்னர் ஜீ தமிழ் பிரபலம் புல்லப் எடுத்து அருண் விஜய்க்கு சவால் விட அவரும் சவாலை ஏற்று கொண்டு புல்லப் எடுத்து மிரள வைத்துள்ளார்.
இந்த ப்ரோமோ வீடியோ கோலிவுட் மேன்சன் நிகழ்ச்சியின் மீதான ஆர்வத்தை கூட்டி வருகிறது.
தேங்காய் பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
காந்தாரா 2 படத்தின் 7 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
கம்ருதீன் மீது சகப் போட்டியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
மனோஜை ரோகிணி திட்டி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…