சரும ஆரோக்கியத்திற்கு எண்ணெய் சத்து மிகவும் அவசியம். ஒவ்வொரு வகையான எண்ணெய்யிலும் பல நன்மைகள் நிறைந்திருக்கின்றன. அதில் வைட்டமின் ஈ எண்ணெய்யில் இருந்து நமக்குக் ஏராளாமான நன்மைகள் கிடைக்கின்றன.
இயற்கையாகவே வைட்டமின் ஈ சத்து நிறைந்துள்ள உணவுப் பொருட்களில் இருந்து இந்த எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது.
வைட்டமின் ஈ மாத்திரை சருமத்திற்கு மிக சிறந்த அழகு சாதன பொருளாக விளங்குகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
வைட்டமின் ஈ கேப்ஸ்யூலை பிரித்து அதிலிருந்து என்ணெயை எடுத்து அதனுடன் சிறிது மஞ்சள் பொடியை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இதனை தொடர்ந்து செய்துவர கரும்புள்ளிகள் விரைவில் மறைந்து விடும்.
பளபளப்பான சருமத்திற்கு : காபி தூள், ஒரு விட்டமின் ஈ கேப்ஸ்யூல் மற்றும் இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தை அப்ளை செய்து நன்கு ஸ்க்ரப் செய்து பின்னர் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் ஒரு முறை செய்து வர சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சருமம் பளபளப்பாக காணப்படும்.
சுருக்கங்கள் மறைய : விட்டமின் ஈ எண்ணெயை முகத்தில் தேய்த்து இரவு முழுவதும் அப்படியே விடுங்கள். மறுநாள் காலை முகத்தை கழுவலாம். இப்படி செய்வதனால் முகத்தில் இருக்கும் சின்ன சுருக்கங்களும் மறைந்து இளமையான தோற்றத்தை பெற முடியும்.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…