Wrap for Kumbaari
ராயல் எண்டர்ப்ரைசஸ் சார்பில் ‘பறம்பு’ குமாரதாஸ் தயாரிக்கும் தமிழ் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் திரைப்படம் ‘கும்பாரி’. யோகிபாபு நடிப்பில் ‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ எனும் திரைப்படத்தை இயக்கிய கெவின் இரண்டாவதாக இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 30 நாட்களாக நடைபெற்று முடிந்தது. இதனை கும்பாரி படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டினர்.
நாயகனாக அபி சரவணன், நாயகியாக மஹானா ஆகியோர் நடிக்கும் இப்படத்தில் ஜான் விஜய், பருத்திவீரன் சரவணன், மதுமிதா, சாம்ஸ் & காதல் சுகுமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் கெவின் கூறியதாவது …
இந்த படம் காதல், காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. நாயகனின் காதலை சேர்த்து வைத்த பால்ய மீனவ நண்பன் தீடிரென காணாமல் போகிறான். காணாமல் போன நண்பனை நாயகன் காப்பாற்றினாரா இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதை.
இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமாரி, நாகர்கோவில், பூவாறு, முட்டம், பறம்பு மற்றும் கேரளாவின் அடர்ந்த காட்டுப்பகுதி ஆகிய இடங்களில் 30 நாட்களாக ஒரே கட்டமாக நடைபெற்று முடித்துள்ளோம்.
பிரசாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெயப்ரகாஷ் & ஜெய்தன் ஆகியோர் இசையமைக்கிறார்கள்.
ஜெய் படத்தொகுப்பு செய்ய,ராஜு முருகன் நடனம் அமைத்துள்ளார். மைக்கல் சண்டைக்காட்சிகளை அமைக்க, கிருஷ்ணமூர்த்தி டிஐ செய்கிறார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘ஓம்’. இப்படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் கதாநாயகிகளாக…
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘சண்டியர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்த விஜய், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி,…
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘ஓம்’. இப்படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் கதாநாயகிகளாக…
நடிகர் சூர்யாவுக்கு இந்த ஆண்டு வெற்றிகரமான ஆண்டாக அமைந்துள்ளது. ‘கருப்பு’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ எனத் தொடர்ந்து இரண்டு படங்கள்…
பெண் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றும் நயன்தாராவுக்கு அடிக்கடி விசித்திரமான கனவுகள் வருகின்றன. அந்தக் கனவுகளில் தோன்றும் அரக்கர்கள், மயிலாஞ்சி என்ற…