What is the story of Suriya 46? - Producer's explanation
சூர்யா 46 படத்தின் கதை என்ன? – தயாரிப்பாளர் விளக்கம்
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆன்மீக கதைக்களத்தில் கமர்ஷியலாக இப்படம் உருவாகியுள்ளது. இதனையடுத்து சூர்யா வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்துள்ளார்.
‘பிரேமலு’ படம் மூலம் பிரபலமானமலையாள நடிகை மமிதா பைஜு. தமிழில் ‘ரெபல்’, ‘டியூட்’ படங்களில் நடித்த இவர் ,‘ஜனநாயகன்’ படத்திலும் நடித்துள்ளார்.
தற்போது சூர்யா ஹீரோவாக நடித்துள்ள 46-வது படத்திலும் மமிதா பைஜு நடித்துள்ளார். இதில் அவர், சூர்யாவின் சகோதரியாக நடிப்பதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் அவர்களின் கதாபாத்திரங்கள் குறித்து தயாரிப்பாளர் நாக வம்சி தெரிவித்துள்ளார். இப்படத்தின் கதை பற்றி அவர் கூறும்போது,
‘சூர்யா 46 படத்தின் கதை, 45 வயதுடைய ஒரு ஆணுக்கும் 20 வயதுகொண்ட பெண்ணுக்குமான உறவைப் பற்றியது. சூர்யா கேரக்டர், கஜினி படத்தின் ஃபிளாஷ்பேக்-கில் வரும் சஞ்சய் ராமசாமியின் கதாபாத்திரத்தைப் போன்று இருக்கும்’ என தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள், அவர்கள் காதலர்களாகத்தான் நடித்துள்ளனர் என வலைதளங்களில் கூறி வருகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்.
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…