What a Big Boss show this is ... Kasturi
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெற முடியாமல் படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து, மக்கள் நீதி மய்யத்தில் இருந்து துணை தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ், பொதுச் செயலர் குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திடீரென கட்சியில் இருந்து விலகினர்.
அவரை தொடர்ந்து, மக்கள் நீதி மய்யத்தில் இருந்து மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மப்ரியா கட்சியில் இருந்து விலகுவதாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒருவர் பின் ஒருவராக மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அக்கட்சியை சார்ந்தவர்கள் விலகி வருவதை கலாய்க்கும் விதமாக, நடிகை கஸ்தூரி பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அதில் “மதுரவாயில் தொகுதியில் போட்டியிட்ட யூடியூபர் பத்மபிரியா, வேளச்சேரி தொகுதி போட்டியிட்ட சந்தோஷ் பாபு ஆகிய இருவருமே மக்கள் நீதி மய்யம் கட்சியில், தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர்தான் சேர்ந்தனர். தற்போது இருவரும் விலகி விட்டனர். இது கிட்டத்தட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் எலிமினேஷன் போலவே தெரிகிறது அடுத்த எலிமினேஷன் யார் என்பதை பார்ப்போம் என்று பதிவு செய்திருக்கிறார்.
"இது ஒன்றும் தியேட்டர் கிடையாது" - ரசிகர்களிடம் அஜித் கோபம் அஜித்குமார் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக்…
விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…
திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…
பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…
சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…