vtk movie producer post to udhayanidhi
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் வெந்து தணிந்தது காடு. கௌதம் மேனன் இயக்கத்தில் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 20 கோடி ரூபாய் வசூல் செய்தது.
தொடர்ந்து வசூல் வேட்டையாடி வந்த இந்த படம் ஏழு நாள் முடிவில் ரூபாய் 52 கோடி வசூல் செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக VTK தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்கள் சிம்புவிற்கு சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இயக்குனரான கௌதம் மேனனுக்கு ராயல் என்ஃபீல்டு பைக்கை பரிசாக கொடுத்துள்ளார். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது.
இந்நிலையில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெற்றி பெற்றதற்கு இப்படத்தை வழங்கிய உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நன்றி தெரிவித்துள்ளார். அதனை, அவர் சமூக வலைதள பக்கத்தில் அவர்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அதில் இப்படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி என பதிவிட்டு அவர் இன்னும் பல படங்களில் உதயநிதியுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
வரகு அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…