நடிகர் ரக்‌ஷன் நாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

பிலியா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் குவியம் மீடியா ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்க,
இரா கோ யோகேந்திரன் இயக்கத்தில்,
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படப்புகழ் நடிகர் ரக்‌ஷன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, இன்று பூஜையுடன் துவங்கியது.

கண்ணும் கண்ணும் கொள்ளைடித்தால் படத்தில் தனது தனித்த, நகைச்சுவை நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்த நடிகர் ரக்‌ஷன், நாயகனாக புதிய படத்தில் அறிமுகமாகிறார். உணர்வுபூர்மான காதல், நட்பு, உறவுகளை மையமாக கொண்டு, அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் பொழுது போக்கு திரைப்படமாக இப்படம் உருவாகிறது.

கலக்கபோவது யாரு தீனா, விஷாகா திமான், பிராங்க்ஸ்டர் ராகுல், மற்றும் பலர் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு, மலையாளத்தின் பிரபல இசையமைப்பாளர் சச்சின் வாரியர் இசையமைக்கிறார். தாமரை பாடல்வரிகளை எழுதுகிறார். கோபி துரைசாமி ஒளிப்பதிவு செய்ய, ‘அர்ஜூன் ரெட்டி’ படப்புகழ் செஷாங் மாலி படத்தொகுப்பு பணிகளை செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட்லுக், டீசர் குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.

jothika lakshu

Recent Posts

இது தான் என் எதிர்கால லட்சியம் – மனம் திறந்த மமிதா பைஜூ

டியூட்’, ‘கர’ உள்ளிட்ட தமிழ் படங்கள் மூலம் கவனம் பெற்ற மமிதா பைஜூ, தற்போது தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும்…

27 minutes ago

“மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்” – முதலமைச்சர் விஜய்க்கு சவுந்தர்யா ரஜினிகாந்த் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான சவுந்தர்யா ரஜினிகாந்த், நாகர்கோவிலில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். பின்னர்…

38 minutes ago

ஜூலை 3ஆம் தேதி வெளியாகும் ‘கட்டா குஸ்தி 2’!

விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்த ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன…

48 minutes ago

முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகர் சங்க நிர்வாகிகள்

தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் கடந்த 10ஆம் தேதி பதவியேற்றார். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், விஜய்க்கு பதவிப்…

57 minutes ago

ஆக்ஷனில் மிரட்டும் லோகேஷ் கனகராஜின் ‘DC’ டிரெய்லர்!

‘மாநகரம்’, ‘கைதி’, ‘விக்ரம்’, ‘லியோ’, ‘கூலி’ போன்ற வெற்றி படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக திகழும் லோகேஷ் கனகராஜ், தற்போது…

1 hour ago

சட்டென்று மாறுது வானிலை திரை விமர்சனம்

ஆதரவற்ற இளைஞரான ஜெய், ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் மீனாட்சி கோவிந்தராஜனை சந்திக்கும் அவர், முதல்…

1 hour ago