vishals-assistant-hari-krishnan-admitted-to-hospital
திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான ‘செல்லமே’ படத்தின் மூலம் திரைத்துறையில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பின்னர், சண்டகோழி, திமிரு, தாமிர பரணி, சத்யம் போன்ற பல படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து அவர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டார். சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் நீண்ட நாட்களுக்கு பின் விஷாலின் படம் ரூ.100 கோடி கிளப்பில் இணையவுள்ளதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர்.
நடிகர் விஷாலின் உதவியாளராக இருப்பவர் ஹரி கிருஷ்ணன். இவர் விஷாலின் நீண்ட கால நண்பரும் தேவி அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளரும், மக்கள் நல இயக்கத்தின் அகில இந்திய செயலாளருமாவார். இந்நிலையில் உதவியாளர் ஹரி கிருஷ்ணன் உயர் ரத்த அழுத்தம் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென மயங்கி விழுந்ததால் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். சிகிச்சையில் அவருக்கு இரத்த அழுத்தம் அதிகம் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது பில்ராத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஹரி கிருஷ்ணனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் குறிப்பாக…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
காந்தாரா 2 படத்தின் 10 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…