vishal-movie latest update
“சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், கவுதம் மேனன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ‘விஷால் 34’ என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் அருகே இன்று நடந்தது.
படப்பிடிப்பில் நடிகர் விஷால், கதாநாயகி பிரியா பவானி சங்கர் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். இதற்காக ஜலகண்டேஸ்வரர் கோவில் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் வேலூர் தெற்கு போலீஸ் நிலையம் போல செட் உருவாக்கப்பட்டு இருந்தது. படப்பிடிப்பு நடக்கும் இடம்கதாநாயகி பைக்கில் செல்வது போலவும் கைதிகளை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்துச் செல்வது போல காட்சிகள் இன்று படமாக்கப்பட்டன. படப்பிடிப்பு நடைபெறும் இடங்களை சுற்றிலும் பாதுகாவலர்கள் நிற்க வைக்கப்பட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் பக்தர்கள் அவதி அடைந்தனர். ஏராளமானோர் குவிந்ததால் கோட்டை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.”,
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களை தொடர்ந்து சாய் பல்லவி, தற்போது இந்தியிலும்…
"சினிமாவில் இருக்கும் சிலர் தடை போடுகின்றனர்" - நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது என்ன? சினிமாவில் முன்னேற்றத்திற்கு தடைகளாக இருப்பவர்கள் யார்…
விரைவில் விஷால், சாய் தன்ஷிகா திருமணம் எப்போது தெரியுமா? நடிகர் சங்க கட்டிட வேலை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.…
இஸ்லாமிய வாழ்வியலைப் பேசும் ‘ஹபீபி’ 'ஹபீபி' என்ற படத்தின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களை…
முட்டாள்தனம், மனநோயாளி: பிரபல இயக்குநர்கள் கடும் வாக்குவாதம்.. த கேரள ஸ்டோரி-2 படம் தொடர்பாக எழுந்துள்ள கடும் விவாதம் பற்றிப்…
தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…