Latest Tamil cinema News
ஆன்மீகம்

ஸ்வேத கடல் நுரை விநாயகர் பற்றி தெரிந்து கொள்ளலாமா?

# கும்பகோணம் அருகில் உள்ளது, திருவலஞ்சுழி சிவாலயம். இங்குள்ள விநாயகரை இந்திரன் பூஜித்ததாக தல வரலாறு சொல்கிறது. கடல் நுரையால் செய்த விக்கிரகம் என்பதால், இந்த விநாய கருக்கு கைகளால் தொட்டு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. சங்கு கொண்டு அபிஷேகம் நிகழ்த்தப்படுகிறது.

# சுவேதம்’ என்பதற்கு ‘வெண்மை’ என்று பொருள். கடல் நுரை வெண்மை நிறம் கொண்டது என்பதால், இத்தல விநாயகர் ‘சுவேத விநாயகர்’ என்று பெயர் பெற்றுள்ளார்.

# தேவர்கள் திருப்பாற்கடலை கடையத் தொடங்கும் முன் விநாயக பூஜை செய்ய மறந்தார்கள். ஆகையால் தான் ஆலகால விஷம் பாற்கடலில் இருந்து வெளி வந்தது.

அதனால் அவதிகளுக்கு உட்பட்ட தேவர்கள், தங்கள் தவறை உணர்ந்து, அந்த வேளையில் விநாயகரை ஆவாஹனம் செய்ய வேறு ஏதும் இல்லா நிலையில் பொங்கி வந்த கடல் நுரையை பிடித்து பிள்ளையாரை உருவாக்கி பூஜை செய்தனர். அதன் பின் விநாயகர் அருளால் எடுத்த காரியம் பூர்த்தி அடைந்து அமுதம் பெற்றார்கள்.

# காவிரி வலமாக சுழன்று செல்வதால், இந்தத் திருத்தலத்திற்கு ‘திருவலஞ்சுழி’ என்ற பெயர் ஏற்பட்டது. இந்திரன் ஒரு கோயிலும் கட்டினான். அந்தக் கோயிலில் இன்றும் இந்திரன் பூஜித்த அந்த விநாயக மூர்த்தி அருட் பாலிக்கிறார்.

Related posts

மகம் நட்சத்திரக்காரர்கள் மிகுந்த அதிர்ஷ்டங்களை பெற இவற்றை செய்யுங்கள்

user

செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் செய்ய வேண்டியவை? செய்ய வேண்டாதவை? தெரிந்து கொள்ளலாமா!

user

கோவிலில் பலிபீடத்தில் எவ்வாறு வணங்க வேண்டும்? ஏன் பலிபீடம்? தெரிந்துகொள்வோமா!

user

Leave a Comment