Vijay Sethupathi starring in the web series of famous Bollywood actor
விஜய் சேதுபதி இமேஜ் பார்க்காமல் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த திருநங்கை கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன. சீதக்காதியில் வயதானவராக வந்தார். விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் வில்லன் வேடம் ஏற்றார்.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது.
இதனிடையே அமீர்கானின் ‘லால் சிங் சட்டா’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக இருந்த விஜய் சேதுபதி, சில காரணங்களால் சமீபத்தில் அப்படத்தில் இருந்து விலகினார்.
இந்நிலையில், அவருக்கு மீண்டும் ஒரு பாலிவுட் வாய்ப்பு தேடி வந்துள்ளது. பிரபல இந்தி நடிகர் ஷாஹித் கபூர் ஹீரோவாக நடிக்கும் வெப் தொடரில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த வெப் தொடரில் ஷாஹித் கபூருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளாராம்.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…