Vijay Sethupathi in Mysskin film
மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், ‘பிசாசு.’ அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது. முருகானந்தம் தயாரிக்க உள்ள இந்த படத்தையும் மிஷ்கினே இயக்குகிறார்.
முதன்மை கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார். அதேபோல் ‘சைகோ’ படத்தில் வில்லனாக நடித்த ராஜ்குமார் பிச்சுமணி, முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சின்ன வேடமாக இருந்தாலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதால் விஜய் சேதுபதி இதில் நடிக்க சம்மதித்துள்ளாராம்.
விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகளை 5 நாட்களில் எடுத்து முடிக்க மிஷ்கின் திட்டமிட்டுள்ளாராம். தற்போது பிசாசு 2 படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. விரைவில் விஜய் சேதுபதி படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளாராம்.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
மதராசி படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
எனக்கு அஜித் மேல கிரஷ் என்று பிரபல நடிகை பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி என் மூலம் அறிமுகமான ரோபோ…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் கல்லை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…