Vijay Sethupathi film actress paired with GV Prakash
பரத் நடித்த கூடல்நகர் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. இதையடுத்து இவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் தேசிய விருது பெற்றது. பின்னர் நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.
இவர் இயக்கத்தில் உருவாகி உள்ள இடம் பொருள் ஏவல், மாமனிதன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், அடுத்ததாக ஜி.வி.பிரகாஷுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக இயக்குனர் சீனு ராமசாமி சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் இப்படத்தில் நர்ஸாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நடிகை காயத்ரி ஏற்கனவே சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘மாமனிதன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்னும் ரிலீசாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களை தொடர்ந்து சாய் பல்லவி, தற்போது இந்தியிலும்…
"சினிமாவில் இருக்கும் சிலர் தடை போடுகின்றனர்" - நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது என்ன? சினிமாவில் முன்னேற்றத்திற்கு தடைகளாக இருப்பவர்கள் யார்…
விரைவில் விஷால், சாய் தன்ஷிகா திருமணம் எப்போது தெரியுமா? நடிகர் சங்க கட்டிட வேலை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.…
இஸ்லாமிய வாழ்வியலைப் பேசும் ‘ஹபீபி’ 'ஹபீபி' என்ற படத்தின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களை…
முட்டாள்தனம், மனநோயாளி: பிரபல இயக்குநர்கள் கடும் வாக்குவாதம்.. த கேரள ஸ்டோரி-2 படம் தொடர்பாக எழுந்துள்ள கடும் விவாதம் பற்றிப்…
தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…