vijay-makkal-iyakkam-innovated-the-new-app update
கோலிவுட் திரை வட்டாரத்தில் இளைய தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி படைப்பள்ளி இயக்கிக் கொண்டிருக்கும் வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் விஜய் ஆப் டெவலப்பராக நடித்து வருகிறார். வரும் பொங்கல் பண்டிகைக்கு இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நிறைய சமூக சேவையில் செய்து வருவது குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் தற்போது இவர்கள் செய்துள்ள புதிய செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது நாமக்கல்லை சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் அவசர காலத்தில் ரத்தம் தேவைக்காக உதவும் வகையில் ‘குருதி மென்பொருள் ஆப்’ ஒன்றை உருவாக்கி இருக்கின்றனர். அதற்குப்பின் அந்த ஆப்பிள் ரத்த வகை, தொலைபேசி எண் போன்றவற்றை பதிவு செய்யுமாறு இளைஞர்களிடம் விழிப்புணர்வும் செய்து வருகின்றனர். இவர்கள் செய்துள்ள இந்த நல்ல விஷயத்தை வியப்புடன் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
Beep Tamil Trailer | Raaghav, Yamini, Prerna, Priya, Nithish | Crime Drama | Mind Bending…
Arugey Arugey Lyrical Video | I'm Game | Dulquer Salmaan, Kayadu Lohar | Armaan Malik,…
தேவதாஸ், சந்திரா ஆகிய பெயர்களின் சுருக்கமே ‘டி.சி’. கேங்ஸ்டராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசாரின்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், நடிப்புடன் கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன்…
‘சீதா ராமம்’, ‘ஹாய் நானா’ உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாகூர், இந்திய இளம் கிரிக்கெட் வீரர்…
திரையுலக நட்சத்திரங்களின் சம்பளம், சொத்து மதிப்பு, பிராண்ட் மதிப்பு, ஆடம்பர வாழ்க்கை முறை உள்ளிட்டவை குறித்து ரசிகர்கள் மத்தியில் எப்போதும்…