Vijay imposed action restrictions on the Vijay people's movement
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் பெயரில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் கட்சியாக மாற உள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் விஜய் திட்டவட்டமாக மறுக்க, நான் தான் விஜய் பெயரில் கட்சி ஆரம்பித்தேன், அவருக்கே அது தெரியாது என அவருடைய அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி விளக்கம் ஒன்றை அளித்தார். இதையறிந்த விஜய் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில் எஸ்.ஏ.சி. கட்சிக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்த விஜய், தனது ரசிகர்கள் யாரும் அதில் இணைய வேண்டாம் என உத்தரவிட்டார்.
மேலும் தனது பெயரையோ, புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் எச்சரிக்கைவிடுத்திருந்தார்.
இந்நிலையில், தனது விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்த பழைய நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை விஜய் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிதாக மாவட்டத் தலைவர்கள், இளைஞர் அணி தலைவர்களை சென்னை, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இயக்கத்தின் பெயர், புகைப்படம், கொடி உள்ளிட்ட அனைத்திற்கும் அனுமதி பெற வேண்டும் என்றும் இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
காந்தாரா 2 படத்தின் 10 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…