vijay fans upset for beast first single
நடிகர் விஜய்க்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அவரது படங்களை அவர்கள் எந்த அளவுக்கு கொண்டாடுவார்கள் என்பதும் எல்லோருக்கும் தெரியும். படத்தை பற்றி ஒரு சின்ன அப்டேட் வந்தாலும் அதை பெரிய அளவில் கொண்டாடிவிடுவார்கள்.
ஏற்கனவே இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் பீஸ்ட் படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது. அதில் படத்தில் ரிலீஸ் பற்றிய விவரம் இடம்பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு பீஸ்ட் முதல் சிங்கிள் பற்றிய அப்டேட் வருகிறது என இணையத்தில் தகவல் பரவியது.
விஜய் ரசிகர்கள் எல்லோரும் மிக ஆவலாக காத்திருந்தார்கள். பீஸ்ட் அப்டேட் வரும் என நம்பி ட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்ட் செய்துவிட்டனர். #BeastFirstSingle என்ற டேக்கில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ட்விட்கள் பதிவானது.
ஆறு மணி ஆனது.. ஆறரை ஆனது.. ஆனால் அப்டேட் மட்டும் காணோம். அப்போது தான் வந்த செய்தி வதந்தி என்பதை விஜய் ரசிகர்கள் உணர்ந்தார்கள். இப்படி ஒரு நியூஸ் பரப்பியது யார் என்று தான் அவர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…