viduthalai-movie-telugu-release-update
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் கடந்த 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்று வரும் திரைப்படம் விடுதலை. இதில் சூரி கதாநாயகனாக நடிக்க இப்படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
இளையராஜா இசையமைப்பில் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாராட்டுகளை குவித்து வரும் இப்படத்தை தற்போது தெலுங்கிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி விடுதலை திரைப்படம் தெலுங்கில், ‘விடுதலா’ என்ற பெயரில் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தினை தெலுங்கு நடிகர் அள்ளு அர்ஜுனின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் வெளியிட இருக்கிறார். இது குறித்த அதிகாரபூர்வமான தகவலை ட்ரெய்லருடன் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
Gatta Kusthi 2 Trailer | Vishnu Vishal, Aishwarya Lekshmi | Chella Ayyavu | Sean Roldan…
Nachindhi Machanane Lyric Video | Magudam (Tamil) | Vishal | Anjali | Gv Prakash
The Dark Heaven Official Trailer | Sidhu Sid | Tharshika | Rithvika | Balaaji
கலைப்புலி V Creations எஸ். தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படம்…
பிரபல இயக்குநரும், நடிகரும், திரைத்துறையின் பல்துறை கலைஞருமான கே. பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சென்னை கிரீம்ஸ்…
தமிழ் சினிமாவின் “திரைக்கதையின் மன்னன்” என போற்றப்படும் இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் கே. பாக்யராஜ் (கிருஷ்ணசாமி பாக்யராஜ்) 1953…