Vetri maaran about viduthalai 2 movie
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த மார்ச் 31-ம் தேதி வெளியான விடுதலை -1 படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், விடுதலை 2 தாமதமாக என்ன காரணம் என்று இயக்குனர் வெற்றிமாறன் வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “பனி பொழிவில் கிளைமேக்ஸ் காட்சிகளை படமாக்க 100 நாட்கள் முயற்சி செய்தோம். ஆனாலும் முடியவில்லை. நான் படமாக்கும் விதத்தை பார்த்தால், நான்கு ஆண்டுகள் ஆனாலும் முடியாது என பிறகுதான் தெரிந்தது. இதன் காரணமாக செயற்கை பனிபொழிவை உருவாக்கி படமாக்கினோம். இதனால் தான் விடுதலை 2 முடிக்க காலதாமதம் ஆனது,” என்று தெரிவித்தார்.
விடுதலை 1 படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு ரஜினி உள்பட திரை பிரிபலங்கள் பலர் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…