வாரிசு பட ரிலீஸில் வந்த சிக்கல்.. ஷாக்கான தயாரிப்பாளர்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் தில் ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாக்கியுள்ள திரைப்படம் வாரிசு.

ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், யோகி பாபு, நடிகர் ஷாம், ஜெயசுதா, குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா என பல திரையுலக பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஏற்று நடித்துள்ளனர்.

இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. பொதுவாக விஜய் படங்கள் வெளியாகும் போது மற்ற படங்களை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டுவதுண்டு. இதனால் படத்தின் தயாரிப்பாளர் பொங்கலுக்கு ரெடி செய்து பெரிய அளவில் வசூலை பார்க்கலாம் என கணக்கு போட அதற்கு செக் வைக்கும் விதமாக அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியாக உள்ளது.

இரண்டு படங்களும் மிகப் பெரிய நடிகர்களின் படங்கள் என்பதால் இரண்டிற்கும் சரிசமமான அளவில் திரையரங்குகள் பிரித்து தரப்படும். இதனால் வாரிசு திரைப்படம் எதிர்பார்த்த வசூலில் இருந்து கொஞ்சம் குறைய வாய்ப்புள்ளது.

சரி தமிழில் தான் இப்படி எனப் பார்த்தால் தெலுகுவில் பொங்கலுக்கு பிரபாஸ் நடிப்பில் உருவாக்கியுள்ள ஆதிபுருஷ் திரைப்படம் உட்பட 3 முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அங்கும் வாரிசு படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் உருவாகி உள்ளது. இதனால் தயாரிப்பாளர் தரப்பில் அதிர்ச்சியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

varisu movie release issue in telugu
jothika lakshu

Recent Posts

திணை அரிசியில் இருக்கும் நன்மைகள்.!!

திணை அரிசியில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…

11 hours ago

The Raja Saab Tamil Trailer

The Raja Saab Tamil Trailer | Prabhas | Maruthi | Thaman S | TG Vishwa…

13 hours ago

குக் வித் கோமாளி நிகழ்ச்சி குறித்து பேசிய டைட்டில் வின்னர் ராஜு..!

குக் வித் கோமாளி ஷோ குறித்து டைட்டில் வின்னர் ராஜூ பேசியுள்ளார் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…

19 hours ago

இட்லி கடை : ப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

இட்லி கடை படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம்…

19 hours ago

கணவர் குறித்து பரவும் குற்றச்சாட்டு.. புகழ் மனைவி ஓபன் டாக்.!!

தனது கணவர் குறித்து பரவும் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பென்சி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி…

19 hours ago

நந்தினி கேட்ட கேள்வி, சூர்யாவின் பதில் என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

மாதவி திட்டம் ஒன்று போட, சுந்தரவல்லி வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…

19 hours ago