Latest Tamil cinema News
ஆன்மீகம்

செல்வ நிலையை பெருக்கும் வரலட்சுமி விரதத்தை தெரிந்து கொள்வோமா?

🕉 அஷ்டலட்சுமியரின் அம்சமாக இருந்து கேட்கும் வரங்களை அருள்பவளே வரலட்சுமி ஆவாள். செல்வம், பூமி, கல்வி, அன்பு, புகழ், சாந்தி, மகிழ்ச்சி, பலம் ஆகிய எட்டு செல்வங்களையும் அருளும் தேவியர்களே அஷ்டலட்சுமிகள் ஆவர்.

🕉 செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமியின் ஓர் அம்சமே வரலட்சுமி. வரலட்சுமி விரதமிருந்து வழிபடும் நாளே வரலட்சுமி விரத நன்னாளாகும்.

ஆண்டுதோறும் ஆடி அமாவாசைக்கு பிறகு பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை நாளில் வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கும் நாளாகும்.

🕉 வழிபாட்டு முறை:

வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்து குளித்து வாசலில் பச்சரிசி மாவினால் கோலம் போடவேண்டும்.

பூஜை அறையில் ஒரு தலைவாழை இலையில் ஒரு கலசம் வைத்து அதில் பச்சரிசி அல்லது சுத்தமான தண்ணீரால் நிரப்பவேண்டும். கலசத்திற்கு முன்பாக பழம், தேங்காய் தாம்பூலம் வைக்கப்பட்டு அதில் மஞ்சள் தடவிய கயிறுகளை வைக்க வேண்டும்

🕉 பிறகு கலசத்திற்கு பாவாடை போன்ற வஸ்திரத்தை சாத்த வேண்டும். கலசத்திற்கு முன்பாக மஞ்சளினால் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். முதலில் விநாயகர் பூஜை செய்ய வேண்டும்.

அவை முடிந்ததும் கலசத்தில் வரலட்சுமி ஆவாஹனம் செய்து, விஷ்ணு சகஸ்ரநாமம், லட்சுமி சகஸ்ரநாமம் போன்ற பக்தி ஸ்லோகங்களைப் பாராயணம் செய்ய வேண்டும். நிறைவாக பழங்கள் அல்லது இனிப்புக்கள் என அவரவர் சக்திக்கு ஏற்றவாறு நெய்வேத்தியம் செய்து மங்கள ஆரத்தி எடுக்க வேண்டும்.

🕉 பூஜை முடிந்ததும் மஞ்சள் கயிற்றை எடுத்து கையில் கட்டிக்கொள்ள வேண்டும். அன்று மாலை சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து தாம்பூலம் தர வேண்டும். இவ்வாறு செய்து வரலக்ஷ்மி வழிபாடு செய்தால் அவள் நம்மையும் நம் குடும்பத்தையும் மகிழ செய்து மங்காத வாழ்வினை அளிப்பாள்.

Related posts

ரதசப்தமி வழிபாடு பற்றி தெரிந்து கொள்வோமா?.

user

திருவண்ணாமலை கிரிவலம் பௌர்ணமியில் சுற்றினால் தான் சிறப்பா? தெரிந்து கொள்வோமா?.

user

திருச்செந்தூரின் நாழிக்கிணறு பற்றி தெரிந்து கொள்ளலாமா?

user