சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுக்கு தனது மகனை அறிமுகம் செய்த வரலட்சுமி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் நடிகை வரலட்சுமி. ஹீரோயினாக மட்டுமல்லாது வில்லி வேடங்களிலும் துணிச்சலாக நடித்து வருகிறார்.

இதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் இவருக்கு பட வாய்ப்புகள் வருகிறது.

தற்போது வரலட்சுமியின் கைவசம் காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ், யானை, ஆகிய தமிழ் படங்களும், லாகம் என்ற கன்னட படமும் உள்ளது. இவ்வாறு பிசியான நடிகையாக வலம்வரும் வரலட்சுமி, தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில், சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள நடிகை வரலட்சுமி, ‘எனது மகனை அறிமுகம் செய்கிறேன்’ என பதிவிட்டுள்ளார். அவர் தனது நாய் குட்டியை தான் மகன் என குறிப்பிட்டுள்ளார்.

‘தி லயன் கிங்’ படத்தில் முபாசா தனது குழந்தை சிம்பாவை அறிமுகப்படுத்துவது போலவே வரலட்சுமியும் அந்த வீடியோவில் தனது செல்ல நாய்க்குட்டியை அறிமுகம் செய்துள்ளார். இது தவிர அந்த நாய்க்குட்டிக்காக தனி இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் தொடங்கி உள்ளார்.

Suresh

Recent Posts

மகுடம் திரைவிமர்சனம்

தந்தை - மகன் என இரு கதாபாத்திரங்களில் விஷால் வெளிப்படுத்தும் மாறுபட்ட பரிமாணமே ‘மகுடம்’ படத்தின் முக்கிய பலம். குடும்ப…

14 hours ago

VILLALI VEERANE Lyrical Video

VILLALI VEERANE Lyrical Video | Ravi Teja | GV Prakash | Vel Murugan | Shiva…

14 hours ago

சினிமாவில் அறிமுகமானபோது என் பெற்றோருக்கு பயத்தை ஏற்படுத்தியது – நடிகை மமீதா பைஜூ

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மமீதா பைஜூ. விஜய்யுடன் நடித்த ‘ஜனநாயகன்’, சூர்யாவுடன் நடித்த ‘விஸ்வநாத் அண்ட்…

16 hours ago

டாக்டரான ஐஸ்வர்யா லட்சுமி நடிகையானது எப்படி?

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான…

16 hours ago

சின்னத்திரையில் களமிறங்கும் சமந்தா!

திரையுலகில் முன்னணி நடிகைகள் பலரும் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை சமந்தாவும்…

16 hours ago

லஞ்சம் வாங்க இதயத்தில் பயத்தை ஏற்றியவர் முதலமைச்சர் விஜய்..! – பார்த்திபன்

தமிழக முதலமைச்சராக விஜய் சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமைச் செயலகம் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதை முன்னிட்டு, நடிகர்…

16 hours ago