vamsi-padaipalli-emotional-tweet
தெலுங்கு திரை உலகில் பிரபல இயக்குனராக விளங்குபவர் வம்சி படைப்பள்ளி. இவரது இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. உலக அளவில் ரூ.100 கோடி வரை வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
தில் ராஜு தயாரிப்பில் தமன் இசையில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் இப்படம் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாரிசு திரைப்படத்தை இயக்குனர் வம்சியின் தந்தை பார்த்து கண் கலங்கியபடி அவரை கட்டி அணைத்து கொண்டு தழுவி கொடுக்கும் உணர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது இயக்குனர் வம்சி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘இன்று எனது அப்பா ‘வாரிசு’ படத்தைப்பார்த்து நெகிழ்ந்ததே எனது மிகப்பெரிய சாதனை; என் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் தருணம் இது. நீங்கள் தான் என் ஹீரோ.. லவ் யூ அப்பா’ என்றும் குறிப்பிட்டு அந்த உணர்ச்சிகரமான வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.
RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan
Magale Music Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…