'Valimai Update' Reaches WTC Final Too
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. வினோத் இயக்கி வரும் இப்படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தின் அப்டேட்டை அஜித் ரசிகர்கள் கடந்த பல மாதங்களாக கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும் படக்குழுவினர் தரப்பில் இருந்து இதுவரை எந்த அப்டேட்டும் கிடைத்தபாடில்லை.
இந்நிலையில், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை காண வந்த அஜித் ரசிகர் ஒருவர், வலிமை அப்டேட் என எழுதப்பட்ட பதாகையுடன் மைதானத்தில் அமர்ந்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர் அஸ்வினிடம், அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்ட வீடியோவும் வைரலாகி வருகிறது.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…