விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வைரமுத்து போட்ட பதிவு

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா நேற்று அதிகாலை 3 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். 12-ம் வகுப்பு படித்து வந்த மீரா கடந்த ஒரு வருடமாக மன அழுத்தத்திற்காக சிகிச்சை எடுத்து வந்ததாகவும், மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துக் கொண்டதாகவும் தகவல் வெளியானது. திரைப்பிரபலங்கள் பலர் மீராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது உடல் இன்று கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து, விஜய் ஆண்டனி மகள் மீராவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “கொலை என்பது

மனிதன் மீது

மனிதன் காட்டும் எதிர்ப்பு

தற்கொலை என்பது

சமூகத்தின் மீது

மனிதன் காட்டும் எதிர்ப்பு

விஜய் ஆண்டனி

மகளின் தற்கொலை

சமூகத்தை எந்தப் புள்ளியில்

எதிர்க்கிறது என்பதைக்

கண்டறிந்து களைய வேண்டும்

ஒரு பூ

கிளையிலேயே

தூக்கிட்டுக் கொள்வது

எத்துணை பெரிய சோகம்

வருந்துகிறேன்

ஒரு குடும்பத்தின்

சோகத்தைப் பங்கிட்டு

என் தோளிலும்

ஏற்றிக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

jothika lakshu

Recent Posts

மகுடம் திரைவிமர்சனம்

தந்தை - மகன் என இரு கதாபாத்திரங்களில் விஷால் வெளிப்படுத்தும் மாறுபட்ட பரிமாணமே ‘மகுடம்’ படத்தின் முக்கிய பலம். குடும்ப…

14 hours ago

VILLALI VEERANE Lyrical Video

VILLALI VEERANE Lyrical Video | Ravi Teja | GV Prakash | Vel Murugan | Shiva…

14 hours ago

சினிமாவில் அறிமுகமானபோது என் பெற்றோருக்கு பயத்தை ஏற்படுத்தியது – நடிகை மமீதா பைஜூ

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மமீதா பைஜூ. விஜய்யுடன் நடித்த ‘ஜனநாயகன்’, சூர்யாவுடன் நடித்த ‘விஸ்வநாத் அண்ட்…

16 hours ago

டாக்டரான ஐஸ்வர்யா லட்சுமி நடிகையானது எப்படி?

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான…

16 hours ago

சின்னத்திரையில் களமிறங்கும் சமந்தா!

திரையுலகில் முன்னணி நடிகைகள் பலரும் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை சமந்தாவும்…

16 hours ago

லஞ்சம் வாங்க இதயத்தில் பயத்தை ஏற்றியவர் முதலமைச்சர் விஜய்..! – பார்த்திபன்

தமிழக முதலமைச்சராக விஜய் சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமைச் செயலகம் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதை முன்னிட்டு, நடிகர்…

16 hours ago