சர்வதேச தாய்மொழி தினம் உலகம் முழுக்க இன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருத்தரும் தங்களின் தாய்மொழியை பேணி பாதுகாப்பது மற்றும் அதன் பெருமையை பரைசாற்றும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் தேதி சர்வதேச தாய்மொழி தினமாக கொண்டாட ஐக்கிய நாடுகள் சபை ஒப்புதல் வழங்கியது.
அதன்படி சர்வதேச தாய்மொழி தினத்தன்று தமிழ் திரையுலகின் முன்னணி கவிஞர்களில் ஒருவரும், பாடலாசிரியருமான வைரமுத்து தனது வாழ்த்து மற்றும் அச்சத்தை பகிர்ந்து கொள்வதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
“இன்று
உலகத் தாய்மொழித் திருநாள்
வாழ்த்து அச்சம் இரண்டையும்
பகிர்ந்து கொள்கிறேன்
தாய் என்ற அடைமொழிகொண்ட
சொற்களெல்லாம் உயர்ந்தவை;
உலகத் தன்மையானவை மற்றும்
உயிரோடும் உடலோடும் கலந்தவை
தாய்நாடு தாய்ப்பால்
தாய்மொழி இவை எடுத்துக்காட்டுகள்
ஆனால்,
உலகமயம் தொழில்நுட்பம்
என்ற பசிகொண்ட பற்கள் இரண்டும்
தாய்மொழியின் தசைகளைத் தின்னுகின்றன
உலக தேசிய இனங்கள்
விழிப்போடிருக்கவேண்டிய
வேளை இது
அரசு ஆசிரியர் பெற்றோர்
மாணவர் ஊடகம் என்ற ஐம்பெரும்
கூட்டணிகளால் மட்டுமே
இந்தப் பன்னாட்டுப்
படையெடுப்பைத் தடுக்கமுடியும்
சரித்திரத்தின் பூகோளத்தின்
ஆதிவேர் காக்க
ஓர் இனம்
தாய்மொழி பேணவேண்டும்
எங்கள் தாய்மொழி
எங்கள் அடையாளம்
மற்றும் அதிகாரம்,” என்று பதிவிட்டுள்ளார்
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…