OPS தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வைரமுத்து போட்ட பதிவு

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததையடுத்து சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் மரணம் அடைந்தார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (95). நேற்று முன்தினம் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் பெரியகுளத்தில் இருந்து தேனி என்.ஆர்.டி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பழனியம்மாள் நாச்சியார் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மருத்துவமனைக்குச் சென்று அவரது தாயாரைப் பார்த்து வந்தார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டு விசாரித்தார். தொடர்ந்து ஓபிஎஸ் தாயாருக்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் மரணம் அடைந்தார்.

ஓ.பன்னீர்செல்வம் தாயார் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “உங்களைப் போலவே நானும் கலங்குகிறேன். மூத்து முதிர்ந்து உதிர்ந்தாலும் தாய் தாய்தானே. ஒரு முதலமைச்சரைப் பெற்றுக்கொடுத்தோம் என்ற பெருமாட்டியின் பெருமை மறைவதில்லை. என் பரிவும் இரங்கலும் பன்னீர்செல்வம் அவர்களே. எல்லாத் துன்பங்களிலிருந்தும் காலம் உங்களை மீட்டெடுப்பதாகுக” என்று பதிவிட்டுள்ளார்.

jothika lakshu

Recent Posts

சாமை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

சாமை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…

2 hours ago

“ழகரம்”என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய சூர்யா.!!

புதிய தயாரிப்பு நிறுவனம் சூர்யா தொடங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில்…

6 hours ago

சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, சுரேகா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

7 hours ago

இட்லி கடை : தனுஷ் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

இட்லி கடை படத்தை இயக்க தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…

9 hours ago

கண்மூடித்தனமாக யாரையும் நம்பாதீங்க. அஜித் சொன்ன தகவல்.!!

அடுத்தவன் காலை மிதிச்சுட்டு முன்னேறாதீங்க என்று அஜித் அட்வைஸ் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…

10 hours ago

வித்யாவிடம் மீனா கேட்ட கேள்வி, மனோஜ் சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராணியிடம்…

12 hours ago