வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் புதிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு. வைரலாகும் பதிவு

டிக்கிலோனா’ படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தீபக் ஒளிப்பதிவு செய்ய சிவன் நந்தீஸ்வரன் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார்.

இப்படம் நாளை (பிப்ரவரி 2) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.வடக்குப்பட்டி ராமசாமி போஸ்டர்இந்நிலையில், ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை நடிகர் சந்தானம் தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார். மேலும், இப்படம் 600 திரையரங்களுக்கு மேல் ரிலீஸாக உள்ளது.

jothika lakshu

Recent Posts

AOT Tamil Teaser

AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…

9 hours ago

26 ஆண்டு காலக் கனவை நிறைவேற்றிய ஹிருத்திக் ரோஷன்! கேரள ரசிகையை நேரில் சந்தித்து நெகிழ்ச்சி!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…

10 hours ago

தீபாவளி ரிலீசுக்கு வரிசை கட்டும் தமிழ் படங்கள்… வசூல் வேட்டையில் முந்தப்போவது யார்?

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…

10 hours ago

சமூக வலைதள விமர்சனங்கள்… வெளிப்படையாகப் பேசிய நடிகை அனுபமா பரமேஸ்வரன்!

சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…

10 hours ago

அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நவம்பர் 21-ல் சென்னையில்!

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…

10 hours ago

ஜெயிலர் 2 – திரை விமர்சனம்

சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…

10 hours ago